கரூர் சம்பவத்தில் தவறு செய்தது அரசா?.. விஜய்யா? – அனல் பறந்த மாணவர்கள் விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் 41 மக்கள் உயிரிழந்தனர். ஒன் இந்தியா தமிழ் சார்பில் கரூர் சம்பவம் நடந்ததும், நடப்பதும் என்கிற பெயரில் மாணவர்கள், இளைஞர்கள் இடையே விவாதம் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோட்டீஸ்வரன் கூறுகையில், "தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த பொதுக் கூட்டம் நிகழ்வுகளில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதில்லை. 41 பேர் உயிரிழந்தது சர்வதேச செய்தி. அரசு சரியாக பணிகளை செய்யவில்லை என்ற புகார் உள்ளது. விஜய் சீக்கிரம் வரவில்லை. அரசியலுக்கு வரும்போதே 41 பேரை காவு வாங்கியுள்ளனர்." என்று பிரச்சனையை விரிவாக அலசினார்.

Karur Vijay

விவாதத்தில் பேசிய மாணவர், "ஏற்கனவே டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டம் அதிகம் வந்துள்ளது. மக்கள் ஏன் புரிதல் இல்லாமல் முண்டி அடித்து சென்றார்கள். அரசியல் கட்சிகள் மக்களுக்கு உரிய பிரநிதிநித்துவம் வழங்காத காரணத்தால் இளைஞர்கள் அதிகளவு செல்கிறார்களா என்று யோசிக்க வைக்கிறது. கேரளா போன்ற மாநிலங்களில் கொள்கை சார்ந்து பேசுகிறார்கள். கட்சிகளும், மக்களும் கொள்கை சார்ந்து இல்லாமல் இருப்பதுதான் பிரச்சனை." என்றார்.

தவெகவுக்கு ஆதரவாக பேசிய மற்றொரு மாணவர், "எந்த ஒரு தலைவரும் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று முதல்வரே கூறியுள்ளார். பிறகு ஏன் இந்த சம்பவத்தில் விஜய் மீது பழி சுமத்தப்படுகிறது. விஜய்யை கொலைகாரர் போல சித்தரிக்கிறார்கள். " என்றார்.

இந்த விவாதங்கள் தொடர்பான விரிவான வீடியோவை இங்கு பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+