குடல் வெளியே வரும் அளவுக்கு மிதிப்பட்ட குழந்தைகள்! முகம் சிதைத்த கொடூரம்! மறக்க முடியாத கரூர் துயரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் மரணமடைந்து இன்றுடன் ஓராண்டு ஆகின்றன. அந்த பேரவலத்தின் நினைவு நாளையொட்டி அன்று என்ன நடந்தது என்பதை காணலாம்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்ய கரூருக்கு விஜய் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தின் பேரில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஏராளமானோர் கூடினர்.

karur stampede

அப்போது விஜய் நண்பகல் 12 மணிக்கு வருவதாக சொல்லப்பட்டது. இதனால் காலை 9 மணிக்கே கூட்டம் கூட தொடங்கியது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான கூட்டம் அங்கு கூடியது.

குடிநீர் இல்லை

அங்கிருந்த மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை, உட்கார நாற்காலி கிடையாது. இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றால் உள்ளே வர முடியாதோ, விஜய்யை பார்க்க முடியாதோ என்றெல்லாம் ஏக்கம் இருந்தது.

இதனால் அந்த மக்கள் வெளியே செல்லாமல் களைப்பு, மயக்கத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் விஜய் 12 மணிக்கு வரவில்லை. 9 மணிக்குச் செல்ல வேண்டிய நாமக்கல்லுக்கே நீலாங்கரை வீட்டில் இருந்து 9 மணிக்குத்தான் கிளம்பினார்.

நாமக்கல்லில் 2 மணிக்கு வந்த விஜய்

நாமக்கல்லுக்கு விஜய் வரும் போது மணி 2 இருக்கும். அங்கு பேச்சை முடித்துக் கொண்டு அவர் மதிய உணவுக்கு பிறகு கரூருக்கு பயணத்தை தொடர்ந்தார். அப்போது வழிநெடுகிலும் கூட்டம், இதில் விஜய் பிரச்சார வாகனத்தில் அடிபட்டு சில பைக்குகள் விழுந்தன. அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.

இப்படி விஜய் அந்த கூட்டத்தில் நீந்தி வருவதற்கு இரவு 7 மணியாகிவிட்டது. இருளும் சூழ்ந்து கொண்டது. விஜய்யின் வாகனம் உள்ளே வந்த போது அங்கிருந்த மக்களுக்கு அத்தனை உற்சாகம். அப்போது விஜய் உள்ளேயே அமர்ந்து கொண்டு விளக்கை போட்டு போட்டு அணைத்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

விஜய்யை பார்க்க முண்டியத்த கூட்டம்

இதனால் விஜய்யை பார்க்க மேலும் ஆர்வம் தொற்றியது. மக்கள் ஒரே நேரத்தில் முன்னால் முந்தி சென்றது. அப்போது அங்கு ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது விஜய் பேசத் தொடங்கினார். அவர் பேசிய சில நிமிடங்களில் கூட்டத்தில் ஒரு சிறுமியை காணவில்லை என ஆதவ் அர்ஜுனா வந்து சொல்கிறார்.

உடனே விஜய்யும் "சிறுமியை தேடி கண்டுபிடியுங்கள்" என அங்கிருந்த மக்களுக்கு மைக்கில் சொல்கிறார். இதனால் அச்சத்தில் அங்கிருந்த மக்கள் மேலும் முண்டியடித்து வெளியேற முயன்ற போது பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மின்வெட்டு

அப்போது அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் விஜய்யிடம் தண்ணீர் கேட்டனர். உடனே விஜய் தண்ணீர் கேன்களை கொடுத்தார். இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். இதனால் கூட்டம் சிதறுகிறது. உடனே விஜய்க்கு இது தெரிவிக்கப்பட்டு அவர் பேச்சை நிறுத்திக் கொண்டு "ஜெகதீஷ் ஆம்புலன்ஸ் கொண்டு வரச் சொல்லுங்கள்" என்றார். அப்போது மின்தடையும் ஏற்பட்டதால் நெரிசல் அதிகரித்தது.

அவசரமாக கிளம்பிய விஜய்

இதையடுத்து அந்த பிரச்சார வேனை எடுத்துக் கொண்டு அனைவரும் புறப்பட்டு சென்றுவிடுகிறார்கள். பிறகு பார்த்தால் கூட்டத்தில் பலர் மிதிப்பட்டே இறந்திருக்கிறார்கள். இதையடுத்து உயிருக்கு போராடியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததுமே செந்தில் பாலாஜி ஸ்பாட்டுக்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். முதல்வராக இருந்த ஸ்டாலின் நள்ளிரவு கரூருக்கு பிளைட்டில் வந்தார்.

கரூர் சென்ற ஸ்டாலின்

ஆனால் விஜய்யோ திருச்சியில் பிளைட் பிடித்துக் கொண்டு சென்னை சென்றார். மருத்துவமனையில் மரண ஓலங்கள், எங்கும் அழுகுரல்கள். குழந்தைகள் கீழே விழுந்ததில் அவர்களை மிதித்து குடலே வெளியே வந்ததாகவும் முகமே சிதைத்து போனதாகவும் உறவினர்கள் கம்ணீர் மல்க தெரிவித்தனர்.

குழந்தைகள்

இந்த சம்பவத்தில் பலர் குழந்தைகளையும், கணவரையும் மனைவியையும், தாய், தந்தையரையும் இழந்து பரிதவித்தனர். கரூர் அரசு மருத்துவமனை முழுக்க இருந்த அழுகுரல்கள் இன்னும் அனைவரது காதிலும் கேட்டு பதற செய்கிறது.

மாலை திரும்புவில்லையே

"மாநாட்டுக்கு போய் விஜய்யை பார்த்துவிட்டு வந்துவிடலாம் " என கரூரை சுற்றியுள்ள மக்கள் வாகனங்களை எல்லாம் வைத்துக் கொண்டு வந்தனர். ஆனால் அவர்களில் பலர் மாநாடு முடிந்தும் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மாமல்லபுரத்தில் ஆறுதல்

விஜய்யும் நீலாங்கரை வீட்டிற்குச் சென்றவர், 3 நாட்கள் கழித்து தனது வேதனையை வீடியோவாக பகிர்ந்தார். இதையடுத்து 30 நாட்கள் கழித்து கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வாகனம் வைத்து மாமல்லபுரம் ரிசார்டுக்கு அழைத்து வந்து தனித்தனியே ஒவ்வொருக்கும் விஜய் ஆறுதலை தெரிவித்தார். இறந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அது போல் தவெக சார்பில் ரூ 20 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிள்ளைகளின் கல்விச் செலவுகக்கான உதவிகளையும் ஏற்க தயார் என தவெக அறிவித்திருந்தது.

கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் மீட்பு பணிகளை பார்வையிடாமல் சென்னைக்கு விஜய் வந்ததை பல அரசியல் தலைவர்கள் விமர்சித்தார்கள். தான் வராவிட்டாலும் கட்சி நிர்வாகிகளையும் விஜய் அனுப்பவில்லை என்ற பேச்சு எழுந்தது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகும் நிலையில், விஜய் துயர பதிவை போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+