கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்கும் எஸ்.ஐ.டி.. இடம் பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் யார் யார்?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விவரம் வெளியாகி உள்ளது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் குழுவில் சியாமளா தேவி, விமலா ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். வழக்கின் ஆவணங்களை கரூர் போலீசாரிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழு இன்று பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கரூர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தவெக மாவட்ட செயலாளர்கள் இருவரை கைது செய்தனர்.

இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவானது வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்ற தகவலானது வெளியாகி உள்ளது. இதில் இரண்டு பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது சியாமளா தேவி, விமலா ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். ஏடிஎஸ்பிக்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளன. வழக்கின் ஆவணங்களை கரூர் போலீசாரிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழு இன்று பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications