கரூர் சம்பவம்.. விஜய் கைது செய்யப்படுவாரா? விசிக தலைவர் தொல் திருமாவளவன் பரபர பேட்டி
சென்னை: கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த விஜய்யின் தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யும் கைது செய்யப்படலாம் என தகவல் பரவி வரும் நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்பதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் கடந்த 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர், பெண்கள் 17 பேர் என மொத்தம் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

5 பிரிவுகளில் வழக்கு பதிவு
பல்வேறு தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர். சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் நகர் காவல்துறை சார்பிலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
விஜய் கைது செய்யப்படுவாரா?
கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்பட 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், எந்த ஒரு கட்சி தலைவரும் தங்களுடைய தொண்டர்களும், அப்பாவி மக்களும் இறப்பதை எப்போதும் ஏற்பதில்லை. கரூர் சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பி வந்தனர். இதையடுத்து 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகளையும் முன்வைத்து வருகிறார்கள்.
தொல் திருமாவளவன் பதில்
இந்த நிலையில் தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்து கூறியதாவது:-
விஜய் அவரது பெயர் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கையில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று கோருவதில் எந்த அர்த்தமில்லை. இதில் வேறு எந்து வகையிலாவது விஜய்க்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று அரசு கருதினால் சட்டப்பூர்வமாக அதில் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
வேண்டும் என்றே அவதூறு
சமூக வலைத்தளத்தில் திமுகவுக்கு எதிராக ஒரு சிலர் வெறுப்பை பரப்பி வருகிறார்கள். திமுக ஆட்சியில் இருப்பதால் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. திட்டமிட்டு திமுக, திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். பாஜக அண்ணாமலையை பொறுத்தவரை எந்த ஒரு விசாரணையும் தொடங்குவதற்கு முன்பே கருத்து கூறுகிறார். எனவே அவர் வேண்டும் என்றே அரசியல் செய்வதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..











Click it and Unblock the Notifications