உலக தரத்திற்கு மாறுதே காசிமேடு.. புது முகம் பெறும் "பீச்".. ஸ்டாலினின் சூப்பர் பிளான்.. வரப்பிரசாதம்
சென்னை: சென்னையில் காசிமேடு பகுதியில் மக்கள் பயன்பாடு இன்றி இருக்கும் கடற்கரை பகுதியை சுத்தம் செய்து சுற்றுலாதளமாக மாற்ற உள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எலியட்ஸ் பீச், மெரினா பீச், திருவான்மியூர் பீச் என்று சென்னையில் பல்வேறு பீச்கள் இருக்கின்றன. சென்னை மெரீனாவை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதற்கான பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. முக்கியமாக இங்கே பல புதிய சுற்றுலா அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன, சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.

இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச். மொத்தமாக 12 கிமீ நீளம் கொண்ட இயற்கையான கடற்கரை இது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
கடற்கரைகள்: அதே சமயம் சென்னையில் பயன்படுத்தப்படாத பல்வேறு பீச்களும் கூட இருக்கின்றன. வெறும் கடற்கரைகளாக, குப்பை கொட்டும் இடங்களாக, மீனவர்கள் மட்டும் செல்லும் இடங்களாக பல்வேறு பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளை சரி செய்து, சரியாக பயன்படுத்த தொடங்கினால் மக்கள் வரத்து இங்கே அதிகம் ஆகும். அதேபோல் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகம் ஆகும். அதன்படி காசிமேடு பகுதியில் மக்கள் பயன்பாடு இன்றி இருக்கும் கடற்கரை பகுதியை சுத்தம் செய்ய உள்ளனர்.
கடற்கரை சுத்தம்: வரும் நாட்களில் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையே உள்ள பகுதியை சுத்தம் செய்து, அதை அழகுபடுத்த உள்ளனர். அதன்பின் இதை மக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுலா பீச்சாக மாற்ற உள்ளனர். இங்கே தற்போது பழைய படகுகள் மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளன. இங்கே நடைமேடை அமைப்பது, மண் பகுதியை சுத்தம் செய்வது, விளக்குகளை போடுவது, அலங்கார அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற மாற்றங்களை செய்ய உள்ளனர். இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் புதிய பீச்சாக இது உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.
பீச்: இது போக சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதி முழுக்க புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக காசிமேடு பீச்சில் புதிய சுற்றுலா தளங்களை அமைப்பது, வாட்டர் விளையாட்டுகளை ஏற்படுத்துவது, மீனவர்களுக்காக ஜெட் போட்டுகளை வழங்குவது. புதிய பூங்காக்கங்களை ஏற்படுத்துவது. அதேபோல் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. காசிமேடு
சாட்டிலைட் பீச்சை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மெரினா பேச்சில் இணைப்பு சாலை பகுதியில் இருக்கும் பயன்படுத்தப்படாத பகுதிகளை தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி கழகம் சுத்தம் செய்து வருகிறது.
காசிமேடு சாட்டிலைட் பீச்: இங்கே இருக்கும் குப்பைகளை அகற்றி, பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் பகுதிகளை புனரமைத்து வருகிறது. அதாவது நொச்சி குப்பம், டோம்மிங் குப்பம் பகுதியில் இருக்கும் மெரினாவில் வடக்கு பகுதியைத்தான் சுத்தம் செய்து வருகின்றனர். மெரினா மெயின் கடற்கரைக்கு கொடுக்கப்படும் கவனிப்பு முன்பெல்லாம் இந்த பகுதிக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த இடம்தான் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
அதோடு இங்கே வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பகுதியைத்தான் துணை பீச்.. அதாவது சாட்டிலைட் பீச் என்று அழைக்க உள்ளனர். காசிமேடு பீச்சில் பெசன்ட் நகரில் இருப்பது போல புதிய புட் கோர்ட், மக்கள் நடப்பதற்கான பிளாசா, புதிய அலங்கார அமைப்புகள் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications