டிவி விவாதத்தில் 60 நிமிடங்கள் பேசிய அர்னாப்.. லாக்ஆப் செய்ய மறந்து லைவிலேயே கஸ்தூரி செய்ததை பாருங்க
சென்னை: ரிபப்ளிக் டிவியின் விவாதத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தான் பேச முயற்சித்தும் அர்னாப் பேச வாய்ப்பு தராததால் ஸ்கைப்பை ஆஃப் செய்ய மறந்து லைவ் ஷோவில் மதிய உணவு சாப்பிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை, நெப்போடிசம் உள்ளிட்டவை குறித்து நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பை கிளப்பினார். தற்போது அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற நிலையில் நடிகை கங்கனாவின் கருத்து குறித்து ரிபப்ளிக் டிவியில் விவாதம் நடைபெற்றது.
அர்னாப் கோஸ்வாமி முன்னிலையில் நடந்த லைவ் விவாதத்தில் நடிகையும் வழக்கறிஞருமான கஸ்தூரி கலந்து கொண்டார்.

வீடியோ வைரல்
அப்போது அந்த நிகழ்ச்சியில் கருத்து சொல்ல கஸ்தூரி முயன்றார். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அர்னாப் கோஸ்வாமி அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கஸ்தூரி லைவிலேயே தனது மதிய உணவை எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ வைரலானது.

ஒரு மணி நேரம்
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில் இந்த பெண்ணின் நம்பிக்கை நிலை எனக்கு எனது வாழ்வில் வேண்டும் என்றார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய கஸ்தூரி, நம்பிக்கையெல்லாம் நெறியாளர் அர்னாப் ஹைபர்மோடில் 60 நிமிடங்கள் அர்னாப் பேசிக் கொண்டிருந்தார்.

மறந்துட்டேன்
எப்படியும் அவர் என்னை அவ்வளவு சீக்கிரம் பேச விட போவதில்லை. அதனால் நான் போய் எனது மதிய உணவை அருந்தினேன். ஆனால் ஸ்கைப்பில் லாக்அவுட் செய்ய மறந்துவிட்டேன். இந்த சம்பவத்திற்காக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். அதில் அவமரியாதைக்கென்றோ மரியாதை குறைவுக்கென்றோ எதையும் செய்யவில்லை என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தூங்க செய்யலாம்
அப்போது ட்விட்டர்வாசி ஒருவர் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் சேவை சாப்பிட்டீர்களா, அதற்கு கஸ்தூரி பதில் அளித்தார். நான் சாப்பிட்டது பொங்கல், அப்போதானே அந்த பக்கம் கத்திட்டு இருக்கும் அர்னாப்பின் சப்தம் மறந்து கொஞ்சம் தூங்கவாச்சும் முடியும் என்று பதில் அளித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications