இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை- கஸ்தூரி ட்வீட்
சென்னை: மருத்துவ ரீதியாக சில தவிர்க்க முடியாத காரணங்களை தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் நயன்தாராவும் நானும் அம்மா- அப்பாவாகிவிட்டோம்.

இரட்டை குழந்தைகள்
எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், குழந்தைகளின் கால்களுக்கு முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை போட்டிருந்தார்.

4 மாதங்களில் எப்படி குழந்தை
திருமணமாகி 4 மாதங்களில் எப்படி குழந்தை என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஜூன் 9 இல் திருமணம், அக்டோபர் 9 இல் குழந்தையா என்ற கேள்வி எழுகிறது. எனவே இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடகைத் தாய் மூலம் குழந்தை
திருமணமான 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள எந்த மருத்துவரும் பரிந்துரைத்திருக்க மாட்டார்கள். ஆணுக்கோ பெண்ணுக்கோ குழந்தை பிறத்தலில் பிரச்சினை இருந்தால் கூடுமானவரை சரி செய்யவே மருத்துவர்கள் பார்ப்பார்கள். அதையும் மீறி டெஸ்ட் டியூப் பேபி உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் எல்லாம் உள்ளன.

வாடகைத்தாய் மூலம் எப்படி
இவை எல்லாம் தோற்று ஒரு பெண்ணால் குழந்தையே பெற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்தால் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பர்கள். ஆனால் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆகின்றன. இப்போதுதான் ஹனிமூன் சென்று வருகிறார்கள்.

கஸ்தூரி ட்வீட்
அவ்வாறிருக்க இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றால் இருவரில் யாருக்கேனும் உடல்நலனில் ஏதேனும் பிரச்சினையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடை
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது.

நான் ஒரு வழக்கறிஞர்
அடுத்த சில நாட்களுக்கு இன்னும் சில பல விஷயங்களை கேள்விப்பட போகிறோம். என் வேலையை பார்த்துக் கொண்டு போக சொல்லும் சிலருக்கு நான் ஒரு வழக்கறிஞர் என்பதை கூறிக் கொள்கிறேன். ஒரு விஷயம் சரியா தப்பா என்பதை ஆய்வு செய்வது தவறில்லை என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications