கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது.. மோசமான முன்மாதிரி ஆகிவிடும்.. நீதிமன்றம் குட்டு
சென்னை: "கேவலமான கருத்துக்களை வெளியிடுவோர் மீது வழக்கு தொடரப்பட்டால் அதில் இருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் வெறுப்ப்பு பேச்சு பேசிவிட்டு மன்னிப்பு கோரும் நிலை ஏற்பட்டு விடும். கஸ்தூரி பேச்சு வில்லில் இருந்து வெளியேறிய அம்பு போன்றது" என்று கூறி நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
கடந்த 3 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகை கஸ்தூரி பேசினார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறி கஸ்தூரி ட்வீட் பதிவிட்டார்.

எனினும், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர், மதுரையில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது.. நீதிமன்றம் கண்டிக்காமல் விட்டால் இது மோசமான முன்மாதிரி ஆகிவிடும், அவரது பேச்சு வெறுப்பு பேச்சாகவே உள்ளது என்று கூறினார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:-
தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகையின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே வன்முறை எழும் போது வெடிப்பதற்கு காத்துக்கொண்டு இருக்கும். கஸ்தூரியின் பேச்சு தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமாக சித்தரித்துள்ளது. பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ.. சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது.
நடிகை கஸ்தூரி பேச்சு வெறுப்பு பேச்சாகவே உள்ளது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறி கொள்ளும் கஸ்தூரியின் வாயில் இருந்து வந்துள்ள வார்த்தைகள் இழிவானவை. பேச்சுரிமை என்ற் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. மனுதாரரின் ட்விட் மூலம் மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை.
தனது பேச்சுக்களை நியாய்ப்படுத்தவே கஸ்தூரி முயற்சித்துள்ளார். கீழ்த்தரமான அறிக்கைகள் வெளியிடும் போது நீதிமன்றம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டியது அவசியம். நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்ளாவிட்டால் மோசமான முன் மாதிரியாகவிடும்.
வலமான கருத்துக்களை வெளியிடுவோர் மீது வழக்கு தொடரப்ப்ட்டால் அதில் இருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு மன்னிப்பு கோரும் நிலை ஏற்பட்டு விடும். கஸ்தூரி பேச்சு வில்லில் இருந்து வெளியேறிய அம்பு போன்றது. இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
தன்னை போலீசார் தேடுவதை அறிந்ததும் நடிகை கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றார்கள். நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை கஸ்தூரியை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனால் நடிகை கஸ்தூரி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications