அம்மா வலிக்குதுனு சொல்லியும்? கடித்த கட்டுவிரியன் பாம்பு 2 அடி.. தலை தலையா அடிச்சிட்டு அழுத பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் கொடாலி அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. பாதுகாப்பான வீட்டிற்குள்ளேயே விஷப்பாம்பு புகுந்து அனீஷ் - சூர்யா தம்பதியின் மகனைப் பறித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிகழ்ந்த இந்தத் துயரமான சம்பவத்தை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

கேரள மாநிலம் திருச்சூர் கோடாலி பகுதியை சேர்ந்த சில்ஜோ, ஜோண்ஷி தம்பதியின் மகன்கள் அனோத் (10), ஆல்ஜோ (8). நேற்று முன்தினம் இரவு மகன்கள் தூங்க சென்றனர்..

Kattuviriyan snake Kerala Venomous snake Sleeping snake bite 8

தூங்கு, காலையில் பார்த்துக்கலாம்

சிறிது நேரத்தில் இளையமகன் ஆல்ஜோ திடீரென படுக்கையில் இருந்து அலறி எழுந்தான்.. அம்மா, என்னை எதுவோ கடித்துவிட்டது என்று கூறியுள்ளான். அத்துடன் உடம்பெல்லாம் வலிக்குது, வாந்தி வருவதுபோல் இருக்கிறது என்று பெற்றோர்களிடம் சொல்லி உள்ளான்..

ஆனால், இதை கண்டுக்காத பெற்றோர் காலையில் பார்த்துக்கொள்ளலாம் தூங்கு என்று சொன்னார்களாம்.. நேற்று காலையில் ஆல்ஜோவை எழுப்பியபோது அவன் பேச்சு மூச்சு இல்லாமல் படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

2 நீள கட்டுவிரியன் பாம்பு

ஆல்ஜோவை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதைக்கேட்டு பெற்றோர் இருவரும் கதறி அழுத காட்சி காண்போரை நிலைகுலைய வைத்தது.. ஆல்ஜோ அந்தப் பகுதியில் துறுதுறுவென இருக்கும் சிறுவன் என்பதால், அவனது இழப்பு உறவினர்கள் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது..

இதற்கு பிறகு சிறுவர்கள் படுத்திருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது, ஆல்ஜோ படுத்திருந்த தலையணையை தூக்கி பார்த்த போது அங்கு 2 அடி நீளத்தில் கட்டுவிரியன் பாம்பு பதுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சூர் நகராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஊர் மக்கள் சொல்லும்போது, சமீபகாலமாக கொடாலி மற்றும் செங்கல்லூர் பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாம்..

காலி மனைகளில் பாம்புகள்

காடுகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காலி மனைகளில் இருந்து பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன.. குறிப்பாக மழைக்காலத் தொடக்கத்தில் இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகவும், இது தொடர்பாக வனத்துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

8 வயதே ஆன பள்ளிச் சிறுவன் ஆல்ஜோவின் மரணம் திருச்சூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவனது பள்ளி நண்பர்களும் ஆசிரியர்களும் இந்தச் செய்தியைக் கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீட்டின் பாதுகாப்பான அறையில் உறங்கும்போது கூட ஒரு உயிருக்கு ஆபத்து நிகழும் என்பது அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+