Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டுவிரியன் பாம்களின் இரவு வேட்டை! யாராலும் கண்டுபிடிக்க முடியாத உண்மை.. அனைவரும் அவசியம் அறியணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்புகளில் விஷமுள்ள பாம்பாக கருதப்படுவது கட்டு விரியன்.. ஆனால் கட்டு விரியன் இரவு நேரத்தில் கடிப்பதாகவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் இரவு நேரத்திலேயே ஏற்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.. ஆனால் இது உண்மை காரணம் இல்லை.. தன் உயிருக்கு மனிதனால் ஆபத்து என்றால் எந்த நேரத்திலும், எந்த பாம்புகளும் தாக்கத்தான் செய்யும் என்கிறார்கள் பாம்பு பிடி வீரர்கள்.. அப்படியானால் இரவு நேரத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து இறப்பவர்கள் அதிகரிக்க என்ன காரணம்? அதை இங்கே விரிவாக பார்ப்போம்..

கட்டுவிரியன் பாம்பு இந்தியாவிலுள்ள மிகவும் அபாயகரமான 4 விஷப் பாம்புகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே நடமாடும் பழக்கம் கொண்டதால், பகல் வேளைகளில் பழைய கட்டிட இடுக்குகள் அல்லது வளைகளுக்குள் பதுங்கி இருக்கும்.

Kattuviriyan snake

கட்டுவிரியன் பாம்பு

எனவே கட்டு வரியன் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் அதிகமாக செயல்படும். காரணம் இரவில் வேட்டையாட வெளியே வரும் பழக்கம் இதற்கு உள்ளது.... அதனால் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயமும் உள்ளது..

இதன் உடலில் கறுப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற இரட்டை வரிகள் குறுக்காக அமைந்திருக்கும்.. இந்த வரிகள் பார்ப்பதற்கு உடலில் மோதிரங்கள் அல்லது கட்டுகள் போட்டது போல இருக்கும்.. அதனால்தான் இதற்கு 'கட்டுவிரியன்' என்று பெயர் வந்ததாம்.

நச்சு பாம்புகள்

மற்ற நச்சு பாம்புகளைப் போல சீண்டப்படும்போது சத்தமிடுவது, எச்சரிப்பது போன்ற செயல்களை கட்டு வரியன் பெரும்பாலும் செய்யாது. அதனால்தான் அந்த பாம்பு எங்கு இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.. மேலும் நள்ளிரவில் அதிகமாக இயங்குவதால், இரவு நேரங்களில் கட்டு வரியன் கடியால் ஏற்படும் விபத்துகள் அதிகம் நிகழ்ந்து விடுவதாக மருத்துவ பதிவுகள் கூறுகின்றன..

எனவே இரவு நேரங்களில் வீட்டின் தரைப்பகுதியில் படுத்து உறங்குபவர்கள் இந்த பாம்பின் நடமாட்டம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பாம்புபிடி வீரர்கள் அறிவுறுத்துகிறார்கள்..

ஆனால் கட்டுவீரியன் மிகவும் அமைதியான பாம்பு என்கிறார்கள். தன்னை யாராவது மிதித்தால் அல்லது தொந்தரவு செய்தால் மட்டுமே தற்காப்புக்காக கடிக்குமாம்.. பாம்பின் விஷம் மிகவும் வீரியமிக்க நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுடையது.

கட்டுவிரியன் பாம்பு கடித்தால் அறிகுறிகள்

பொதுவாக மற்ற பாம்புகள் கடித்தால் வலி கடுமையாக இருக்கும், ஆனால் கட்டுவிரியன் கடித்தால் அந்த இடத்தில் பெரிய அளவில் வலியோ அல்லது வீக்கமோ இருக்காது.

கட்டுவிரியனின் நஞ்சு நரம்பு மண்டலத்தை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு, கண் இமைகளைத் திறக்க முடியாத நிலை உருவாகும். சில நேரங்களில் ஈறுகளில் இருந்து ரத்தம் வருதல், சிறுநீரில் ரத்தம் கலத்தல், வாந்தி, மயக்கம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

கடிபட்டவர்கள் அரை மயக்க நிலைக்கு சென்று சுயநினைவை இழக்கக்கூடும். மேலும் வாயில் துர்நாற்றத்துடன் எச்சல் வடிதல், சுவாசம் குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றுமாம்.. நேரம் செல்ல செல்ல, ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் நுரையீரலின் திறன் குறைவதால், கடிபட்டவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது..

இரவு நேரத்தில் பெருகு உயிரிழப்புகள்

அதனால்தான் தூக்கத்தில் கடிக்கப்படும் மனிதர்கள் தாங்கள் கடிக்கப்பட்டதையே அறியாமல் போகும் ஆபத்து அதிகம்... கடித்த சில மணி நேரங்களில் இது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரையே பறிக்கக்கூடும். இரவு நேரத்தில் பாம்பு கடி மரணம் என்றாலே அது பெரும்பாலும் கட்டுவிரியன் பாம்புகளே காரணமாக உள்ளன.

எனவே பாம்புக் கடி சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று விஷ முறிவு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும். தாமதம் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+