ஜப்பானிய மொழியில் தமிழக அரசுக்கு நன்றி.. சர்ப்ரைஸ் கொடுத்த மாணவி.. ஷாக்கான அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர், ஜப்பானிய மொழியில் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலமாக ஜப்பானுக்கு இண்டர்ன்ஷிப் சென்றதாக கூறிய அவர், மீண்டும் நாடு திரும்பும் போது ரூ.21 லட்சத்திற்கு பணி வாய்ப்பு அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் தமிழக அரசு சார்பாக விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். அதேபோல் இயக்குநர்கள் வெற்றி மாறன், தியாகராஜா குமாரராஜா, மிஷ்கின், தமிழரசன் பச்சமுத்து மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகள் பலரும் தங்களின் முன்னேற்றம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதேபோல் இந்தத் திட்டத்தின் பயன்கள், இதன் மூலமாக கிடைக்கும் உதவிகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த விழாவில் நான் முதல்வன் திட்டம் மூலமாக பயனடைந்த மாணவி ஜாலிஜா என்பவர் பேசுகையில், நான் முதல்வன் திட்டத்தில் அப்டேட்டில் இருக்கும் படிப்புகளை சொல்லி கொடுக்கின்றனர். கடைசி ஆண்டின் போது வெளிநாட்டில் இண்டர்ன்ஷிப் இருப்பதாக கூறினார்கள். அதனால் எனக்கு ஜப்பான் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானில் நெகஸ்டன் என்ற நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு வந்தது.
அதன் மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அந்த இண்டர்ஷிப்பின் கடைசி நாளில் எங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றுவிட்டுதான் இந்தியா வந்தோம். அதன்பின் எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. தற்போது ஜப்பானிய மொழியை கற்று வருகிறேன்.

இன்னும் ஓராண்டில் நாங்களும் ஜப்பானில் பணியாற்ற உள்ளோம். நாங்கள் சென்ற அனைவரும் பெண்கள் தான். இதற்கு உதவியாக அமைந்தது நான் முதல்வன் திட்டம் தான். அதற்காக முதல்வருக்கும், இந்த திட்டத்திற்கும் நன்றி என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஜப்பானிய மொழிகள் பேச முடியுமா என்று தொகுப்பாளர் கேட்க, அவர் சரளமாக ஜப்பானிய மொழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சில நிமிடங்கள் பேசினார்.
இது அங்கிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பயன் அடைந்தவர்கள் தங்களின் வாழ்க்கையை மாற்றியதாக கூறிய சம்பவங்கள் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications