திருக்குறளுக்கு உரை எழுதும் வைரமுத்து! பொருட்பாலும் ஓவர்! இன்பத்து பாலை தொடங்கிய கவிப்பேரரசு!
சென்னை: உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளில் உள்ள அறத்துப்பாலுக்கும் பொருட்பாலுக்கும் உரை எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து தற்போது இன்பத்துப் பாலுக்கு உரை எழுத தொடங்கியுள்ளார். விரைவில் அவருடைய உரை உலகெங்கும் வாழும் தமிழர்களின் கைகளில் பொற்களஞ்சியமாக தவழும்.

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்து பால் ஆகிய மூன்று இயல்கள் உள்ளன. இவற்றிற்கு கவிப்பேரரசு உரை எழுதி வருகிறார். அந்த வகையில் அவர் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டார்.
https://x.com/Vairamuthu/status/190291122296363863அடுத்ததாக இன்பத்து பாலுக்கு உரை எழுதவுள்ளார்.
இதுகுறித்து கவி பேரரசு வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழறிந்த தங்கங்காள்!
வணக்கம்.
நாளொன்று விடிகையில்
நற்செய்தி ஒன்றுசொல்லிப்
பத்தாயிரம் பேரையேனும்
பள்ளியெழச் செய்துதான்
குளிக்கவே செல்கிறேன்
இதோ!
இன்றைய மகிழ்ச்சிக்கு
இது
திருக்குறள்
பொருட்பால் உரையெழுதி
முடித்துவிட்டேன்
இனி
இன்பத்துப்பால்
25அதிகாரங்கள் மட்டுமே
இலக்கணம் அறிந்து
இலக்கியம் புரிந்து
நுழைபுலம் நுழைந்து
நுண்பொருள் அளந்து
அறம் பொருள் விழைந்து
அறிபொருள் தெளிந்து
நடுநிலை இருந்து
நன்மொழி விருந்து
படைத்திருப்பதாகவே
இதுவரை உணர்கிறேன்
விரைவில்
தமிழின் காலடியில்
காணிக்கை செய்வேன்
என்
தலையில் கைவைத்துத்
தமிழ்உலகு வாழ்த்தட்டும்
இன்பத்துப்பாலே வருகிறேன்;
இன்னுயிர் பிழிந்து தருகிறேன்
இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
