கயல் சீரியல் வில்லன் வீட்டில் கை வைத்த திருடர்கள்..சினிமா பாணியில் கொள்ளை..எதையுமே விட்டு வைக்கலையே
சென்னை: கயல் டிவி சீரியல் வில்லன் வீட்டில் இருந்த பொருட்களை திருடர்கள் சிலர் திருடிச்சென்றுள்ளனர். எந்த பொருளையும் விட்டு வைக்காமல் துடைத்து எடுத்து சென்றுள்ளனர். சினிமா பாணியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மெமேற்கொண்டுள்ளனர்.
சென்னை மதுரவாயல் அஷ்டலட்சுமி நகர் 2வது பிரதான சாலையில் பிரபல நடிகரான காமராஜர் என்பவர் சூட்டிங் வீடு வைத்துள்ளார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் முக்கிய வில்லன் கதை பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடத்தல் பொருட்களை கை மாற்றி விடும் வேலையையும், போதை பொருட்கள் கடத்தல் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் காமராஜ் வீட்டிலேயே திருடர்கள் நூதனமான முறையில் திருடிச்சென்றுள்ளனர். காமராஜின் வீட்டில் கடந்த ஒரு வாரமாக சூட்டிங் நடக்காத நிலையில் இன்று ஷூட்டிங்காக நடிகர் காமராஜ் இன்று காலை வந்து கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே அறையில் மாட்டி வைத்திருந்த ஏசி ,கழிவறைகளில் தண்ணீர் வரக்கூடிய பித்தளை குழாய்கள், நீர் மோட்டர் ,படுக்கை உறைகளை கூட விட்டு வைக்காமல் மர்ம நபர்கள் துடைத்து எடுத்துச்சென்றிருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மதுரவாயல் குற்றப்பிரிவு காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது பக்கத்து வீட்டில் விசாரனை செய்த போது அந்த வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலை 11 மணியளவில் ஏசி மற்றும் சில பொருட்களை தூக்கிச் செல்வதை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பார்த்துள்ளார். அவர் கேட்கும் பொழுது ஏசி மெக்கானிக் வேலை செய்வதாகவும் ஏசியை ரிப்பேர் செய்ய வந்ததாகவும் கூறிய பொருட்களை எடுத்துச்சென்றுள்ளனர்.
பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக நடித்த கருணாஸ் நீதிபதியின் வீட்டை காலி செய்வது போல அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றி திருடிச்செல்வார் அதே பாணியில் சீரியல் நடிகர் காமராஜின் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications