திமுகவிலிருந்து நீக்கியதும் அழுத மு.க. அழகிரி! சித்தி துர்காவுடன் என்ன பிரச்சினை! கயல்விழி விளக்கம்
சென்னை: தாத்தா இறந்த போது அப்பா மு.க.அழகிரி மிகவும் உடைந்துவிட்டார் என்று அவருடைய மகள் கயல்விழி பேட்டி அளித்துள்ளார்.
மு.க.அழகிரி கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் அதன் பிறகு மீண்டும் கட்சியில் இணைய முயற்சித்த நிலையில் அது இன்று வரை நடக்கவில்லை. இந்த நிலையில் மு.க.அழகிரியையும் பெரியம்மா காந்தியையும் உதயநிதி ஸ்டாலின் போய் சந்தித்து அமைச்சரானதற்கு ஆசி பெற்றுள்ளார்.

அது போல் முதல்வர் ஸ்டாலினும் தனது மலரும் நினைவுகள் குறித்து பேசும் போது அண்ணன் அழகிரி குறித்தும் பேசுவார். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி இறப்பிற்கு பிறகு அழகிரியை நேருக்கு நேர் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.
அண்மையில் தயாளு அம்மாள் பிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற போது கூட இருவரும் தனித்தனியே சென்றனர். இந்த நிலையில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கருணாநிதியின் குடும்பம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் தாத்தாவுக்கும் அப்பாவுக்குமான உறவு சிறப்பாக இருந்தது.
அப்பாவை கட்சியை விட்டு நீக்கிய போது அப்பா கோபாலபுரம் வீட்டுக்கு சென்று தாத்தா கருணாநிதியை சந்தித்தார். அப்போது இருவரும் ரொம்ப எமோஷனல் ஆகி கட்டிபிடித்து அழுதுவிட்டார்கள். கட்சியை விட்டு நீக்கிய போது அப்பா உடைந்து போய்விட்டார். தாத்தா இப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை. அந்த வருத்தம் இன்னும் இருக்கு.
மீண்டும் திமுகவில் சேர அப்பாவுக்கு ஆசையாக இருக்கிறது. அதிமுக கோட்டையாக இருந்த தென் மண்டலத்தை கைப்பற்றி திமுக கோட்டையாக மாற்றியவர் அழகிரி. தாத்தா உயிரிழந்த போது அப்பா மிகவும் உடைந்துவிட்டார். மீண்டும் தாத்தாவுடன் சுமுக உறவில் ஈடுபட முயன்ற நேரத்தில் தாத்தா இறந்ததால் அப்பாவுக்கு நிறைய வருத்தம் இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் அப்பாவுக்கு சந்தோஷம்தான் . அப்பாவை பொருத்தமட்டில் எப்போதும் தலைவர் என்றால் கலைஞர்தான். வேறு எந்த கட்சியிலும் சேர அழகிரி விரும்பவில்லை. ரஜினியோடு அப்பாவுக்கு நல்ல நட்பு உள்ளது. அம்மாவுக்கும் (காந்தி) சித்திக்கும் (துர்கா ஸ்டாலின்) இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. வெளியே அவர்களது உறவில் பிரச்சினை என சொல்வதெல்லாம் பொய்.
பாட்டி தயாளு அம்மாவுக்கு அப்பா என்றால் உயிர். அவருக்கு கண் ஆபரேஷன் செய்ததும் அப்பாவைதான் முதலில் பார்த்தார். அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியாததால் தேசிய அரசியலில் திணறினார் என நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அப்பா அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்தார். இதை அனைவருமே பாராட்டியிருந்தார்கள். இவ்வாறு கயல்விழி தெரிவித்துள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications