விஜய் + அண்ணாமலை + டிடிவி + பிரேமலதா.. எடப்பாடியை காலி செய்ய ‘இது’ போதும்! ஐடியா கொடுத்த அதிமுக மாஜி
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டுமானால் அதிமுகவில் எடப்பாடியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிருப்தியில் இருப்பவர்களும் விஜய்யோடு அணி சேர வேண்டும் எனக் கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி. மேலும் எடப்பாடியால் பதவி பறிக்கப்பட்ட அண்ணாமலை, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தேமுதிக ஆகியோரும் ஓரணியில் திரள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருக்கிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலும் கூட்டணியிலும் மோதல் வெடித்திருக்கிறது.
ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் விலகியிருக்கின்றனர். மாநிலங்களவை சீட்டு விவகாரம் தொடர்பாக தேமுதிகவும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றினால் தான் பாஜக கூட்டணியில் இணைவோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
இதனையடுத்து அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் அண்ணாமலையும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய், ஓபிஎஸ், டிடிவி தினகரன், புதிய தமிழகம் கூட்டணி அமையலாம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்னெடுத்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனும் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி
இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பவர்கள் விஜய்யுடன் கூட்டு சேர வேண்டும் எனவும், மேலும் தேமுதிக, அண்ணாமலையும் விஜய்யுடன் கைகோர்த்தால் பாஜக அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் எனக் கூறுகிறார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," அதிமுகவில் எடப்பாடியால் பாதிக்கப்பட்டவர்களும், விலக்கப்பட்டவர்களும், அதிருப்தியில் இருப்பவர்களும் கூட்டாக விஜய்யோடு அணிதிரண்டு, எடப்பாடியால் அவமானப்படுத்தி பதவி பறிக்கப்பட்ட அண்ணாமலையும் எடப்பாடி மீது வருத்தத்திலிருக்கிற தேமுதிகவும் ஓரணியில் இணையும் பட்சத்தில், மேலும் சில கட்சிகளான பா.ம.க, புதிய தமிழகம் போன்றவர்கள் இணைந்து களம் அமைக்க வேண்டும்.
அண்ணாமலை அதிருப்தி
கூட்டணி அமைச்சரவை என்கிற கருத்து திமுகவிலுள்ள விசிக போன்ற மற்றவர்களையும் இந்த அணியை நோக்கி நகர்த்தும். அப்பொழுது ஆட்சி அமைகிற சக்தியாக இந்த அணி உருவெடுக்கும், களம் திமுகவுக்கும் இந்த புதிய அணிக்குமானதாக இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகளாலும், தன் சர்வாதிகாரப் போக்குகளாலும், தான் மட்டுமே என்கிற செயல்பாடுகளாலும், தன்னை ஒரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராகவும், அம்மாவாகவும் பாவித்துக் கொள்கிறார் எடப்பாடி.
கேசி பழனிச்சாமி
மதவாத இயக்கமாக தமிழகத்தை புறக்கணிக்கிற பாஜகவின் நடவடிக்கைகளாலும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தி எடப்பாடிக்கு தான் அதிமுக என்று தேர்தல் ஆணையம் மூலமாக எடப்பாடியைத் தாங்கிப் பிடிக்கிற பாஜகவுக்கும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வாக்கு பெறுகிற சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படுத்தும். காலம் தாழ்த்தாமல் நேசக்கரம் நீட்டி அதிமுகவை ஒன்றுபடுத்த முயற்சிக்காவிட்டால், அதனுடைய விளைவுகளும், சேதாரமும் அதிகமாக இருக்கும். யோசித்து செயல்படுவது நல்லது." எனக் கூறியுள்ளார்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை?












Click it and Unblock the Notifications