கீழடியில் திணை அரிசி தாவரம் கண்டுபிடிப்பு! 2500 ஆண்டுக்கு முன் பயன்படுத்திய சிறுதானியம்
சென்னை: கீழடி கொந்தகை அகழாய்வில் விலங்குகளின் எலும்புகளும் கிடைத்துள்ள நிலையில் நமது மூதாதையர்கள் என்ன உணவை சாப்பிட்டார்கள் என்பதற்கு சான்றாக திணை அரிசியின் தாவரங்கள் கிடைத்துள்ளன. எனவே தற்போது புழக்கத்திற்கு வந்துள்ள திணை அரிசி 2500 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகை அகழாய்வில் கண்டறியப்பட்ட இரு மண்டையோடுகளின் முக வடிவமைப்பை இங்கிலாந்தை சேர்ந்த லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து தொல்லியல் துறை அமைச்சர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இதுகுறித்து தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி! என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அகழாய்வுகள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் முனைவர் குமரேசன் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக தொல்லியல் துறையோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கீழடி அருகே நடந்த கொந்தகை 4 கட்ட அகழாய்வு பணிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஈமத் தாழிகளில் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டன. அதில் 10-இல் மட்டும் ஓரளவிற்கு எலும்பு கூடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இரண்டு மட்டும் எங்களது ஆய்வுக்கு ஏற்றவகையில் உள்ளது. அவற்றிற்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது.
கிடைக்கப்பட்ட இரு மண்டை ஓடுகளுக்கும் பல்வேறு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் முக வடிவத்தை உருவாக்கியுள்ளனர். இரட்டை பரிணாம தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இரு மண்டை ஓட்டின் முகங்கள் உருவாக்கப்பட்டது.
இதில் 80 சதவீதம் மண்டை ஓட்டின் வடிவத்தை பொறுத்தும் 20 சதவீதம் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தை கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 30 முதல் 50 தொல் மூதாதை குழுவினர் இருந்துள்ளனர். அவர்களில் கீழடியில் வசித்த இவர்கள் எப்படியிருந்திருப்பார்கள் என்பதை ஆய்வு செய்வதுதான் எங்கள் நோக்கம்.
கொந்தகை அகழாய்வில் விலங்குகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன. அவை எந்த மாதிரியான விலங்குகள் என்பதை கண்டறிந்து வருகிறோம். அவை காட்டு விலங்குகளா, இல்லை வீட்டு விலங்குகளா என ஆய்வு செய்கிறோம். தாவரங்களில் திணை அரிசியும் கிடைத்துள்ளது. இதுகுறித்தும் ஆய்வு நடக்கிறது. அது போல் ஈமத் தாழிகளில் பானைகளில் புதைகப்பட்ட சில பொருட்களையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
ஆக தற்போது சிறுதானியங்களான திணை, வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்டவை மிகவும் பாரம்பரிய அரிசிகள் என்பதும் நமது மூதாதையர்கள் இவற்றை பயன்படுத்தியிருப்பதும் தெரியவருகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications