ஏர்போர்ட் மாடலில் செயல்படும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்! தனியார் நிறுவனம் இயக்குகிறது! மாஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பேருந்து நிலையம் சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளத்தில் மூழ்கியது.

Keelampakkam Bus Stand to work in Airport Model as Private company will take care of it

இதன் காரணமாக அங்கே தண்ணீர் வெளியேற்றும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் வெளியேற்றுவதற்கான வெள்ள நீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த பணிகள் முடிந்த பின் அங்கே மீண்டும் புதிய சாலைகள் போடப்படும்.

அங்கே சாலைகள் போடப்பட்ட பின் மீண்டும் ஒருமுறை சோதனைகள் செய்யப்பட்ட பின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும். இந்த நிலையில்தான் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.

இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றன. 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தனியாரிடம் ஒப்படைக்கும் போதே இது சாத்தியம் ஆகும். இதற்காக சில தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்பந்தங்கள் கொடுக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள . 105 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி, இந்த டெர்மினஸ் நாட்டிலேயே சிறந்ததாகப் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது

Keelampakkam Bus Stand to work in Airport Model as Private company will take care of it

அதே சமயம் தனியார் பராமரிப்பு கண்காணிக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனம் அதிக வாகன நிறுத்தம்/நுழைவு கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோட்டல்களில் உணவுக்கான விலையும் கட்டுப்படியாக வேண்டும். இதற்கான ஆலோசனைகளையும் செய்து வருகிறோம். இதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும்.

கிளாம்பாக்கம் டெர்மினஸின் உட்புறம் தயாராக உள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பளபளப்பான டைல்ஸ், சர்வதேச தரத்தில் நேர்த்தியான கழிப்பறைகள், ஆடம்பரமான லிஃப்ட் மற்றும் பஸ் நிறுத்தும் இடங்கள் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. ஆனால் வெளிப்பக்கம் இன்னும் தயாராகவில்லை. டெர்மினஸ் செயல்பாட்டுக்கு வந்த பின் ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் தேங்குவது குறித்து அங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

இதை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. தீபாவளிக்கு முன்பாக இந்த பேருந்து நிலையத்தை திறக்கும் திட்டம் உள்ளது. அதை மனதில் வைத்து பணிகள் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+