பீரோவில் இந்த 1 பொருள் வெச்சி பாருங்க.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் ரகசியம்! இனி கடன் தொல்லை இல்லை
சென்னை: பச்சை கற்பூரத்திற்குச் செல்வத்தை ஈர்க்கும் குணம் இருப்பதாகக் கருதப்படுவதால், வாஸ்துவில் முக்கிய இடத்தை பெறுகிறது.. பொதுவாக, குடும்பத்தில் எவ்வளவு வருமானம் வந்தாலும், எதிர்பாராத செலவுகள் அல்லது கடன் சுமைகளால் நிதி நெருக்கடியைச் சந்திப்பவர்கள் பலரும் ஆன்மீக ரீதியிலான எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது வழக்கம்.. அந்த வகையில், வீட்டின் செல்வம் தங்கும் இடமாகக் கருதப்படும் பீரோ அல்லது பணப்பெட்டியில் சில பொருட்களை வைப்பதன் மூலம் வீண் செலவுகளைக் குறைக்கலாம் என்று ஆன்மீக பெரியோர்களால் சொல்லப்படுகிறது.. இதற்கு மிக முக்கியமாகப் பரிந்துரைக்கப்படும் ஒரு பொருள் பச்சை கற்பூரம் ஆகும்.
பச்சை கற்பூரம் இயற்கையிலேயே வாசனை மிக்கது மற்றும் மங்கலப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. ஒரு சின்ன மஞ்சள் துணியில் 2 துண்டு பச்சை கற்பூரம், ஒரு ஏலக்காய் மற்றும் ஒரு சிறிய துண்டு வசம்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு முடிச்சாகக் கட்டி, அதனைப் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைப்பது பாரம்பரியமான ஒரு முறையாகும்.

பச்சை கற்பூரம் பீரோவில் ஒரு துண்டு
இப்படி செய்வதன் மூலம் அந்த இடத்தில் ஒரு நறுமணம் நிலவுவதோடு, மனதிற்கு ஒருவித அமைதியையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
பணம் வைக்கும் இடத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்.. தேவையற்ற பழைய காகிதங்கள், ரசீதுகள் அல்லது கிழிந்த துணிகளைப் பணப் பெட்டிக்குள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.. அதேபோல, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாட்டின் போது இந்தப் பச்சை கற்பூர முடிச்சிற்குத் தீபாராதனை காட்டிவிட்டுப் பீரோவில் வைப்பது கூடுதல் சிறப்பினைத் தரும் என ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன..
பணத்தை ஈர்க்கும் காந்தம்
நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் பச்சை கற்பூரம் ஏற்றி வழிபடுவதன் மூலம், தடைகள் நீங்கி பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.. மிக விலையுயர்ந்த பூஜைகளைச் செய்ய முடியாதவர்கள் கூட, இதுபோன்ற எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் இல்லங்களில் அமைதியையும் மங்கலத்தையும் நிலைநாட்ட முடியும்..
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் குணம் இருப்பதாகக் கருதப்படுவதால், இதனைத் தொழில் செய்யும் இடங்களிலும் பயன்படுத்தலாம்.. வியாபார தலங்களில் உள்ள கல்லாப்பெட்டியில் ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தைப் போட்டு வைப்பது வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது.
நறுமணம் மிக்க இந்த பொருள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமியின் அருள் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.. இதன் மூலம் தேவையற்ற விரயச் செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கத் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளதாஎக ஆன்மீக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்..
நுழைவாயிலில் பச்சை கற்பூரம்
அதுமட்டுமல்ல, வீட்டின் நுழைவாயிலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் பூக்களைப் போட்டு வைப்பது வீட்டிற்குள் வரும் நபர்களின் எதிர்மறை எண்ணங்களை மாற்றி, மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும்.
குறிப்பாக நிலவாசப்படி மற்றும் பீரோவில் இந்த மாற்றத்தைச் செய்யும்போது, வீட்டில் உள்ளவர்களுக்குப் பொருளாதார ரீதியான தன்னம்பிக்கை பிறக்கும்.. மிகக் குறைந்த செலவில் செய்யக்கூடிய இந்த எளிய ஆன்மீக முறை, பல குடும்பங்களில் நிதி நெருக்கடியைச் சீர்செய்ய உதவும் ஒரு நம்பிக்கையாக இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..












Click it and Unblock the Notifications