கீழடி வெறும் வரலாறு மட்டும் அல்ல.. பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ள நிலையில்.. திமுக செய்த சம்பவம்!
சென்னை: "இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி" என்று திமுக புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ போல தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக நம் கீழடி நாகரிகம் வெளிப்பட்டுள்ளதாக அந்த வீடியோவில் திமுக தொழிநுட்ப பிரிவு வீடியோ வெளியிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கிமு. 8 நூற்றாண்டில் என்னென்ன பயன்படுத்தப்பட்டது? அந்த கால மக்களின் நாகரிகம், விவசாயம், விலங்குகள், கலாச்சாரம் பழக்கவழக்கம் எப்படி இருந்தது?, இரும்பு பயன்படுத்தியது என்பதனை அமர்நாத் ஐஏஎஸ் கண்டுபிடித்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

3ஆம் நூற்றாண்டு அந்த ஆய்வு அறிக்கையை கிமு 3 ஆம் நூற்றாண்டு என திருத்துமாறு மத்திய அரசு, அமர்நாத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. கீழடி தொல்லியல் ஆய்வு பொறுப்பாளராக ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் 3ஆம் கட்ட அகழாய்வு நடத்தி, அமர்நாத் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமர்நாத் கூறுகையில், கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. நான் கண்டுபிடித்ததை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன். 982 பக்க அறிக்கை நான் தாக்கல் செய்த 982 பக்கங்களில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்த தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையை திரித்து எழுத முடியாது. கிமு 8 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கிமு. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவை என மத்திய அரசு மாற்ற வலியுறுத்துகிறது.
இந்த நிலையில், கீழடியில் 2013-2016 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரு கட்ட ஆய்வறிக்கையை நிறுத்தி அறிக்கை வெளியிடுவதை தாமதப்படுத்தியது தொடர்பாக மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே "இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி" என திமுக ஐடி விங் கீழடி பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கூறப்பட்டு இருப்பதாவது:- வணக்கம் நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன்.. புதைந்து கிடந்த எங்கள் நாகரிகத்தை அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள். கீழடி நாகரீகம் வெளியில் வர வர தமிழர் நாகரிகத்தின் மற்றுமொரு தொண்மையை உலகமே அறிய தொடங்கியது.
ஹரப்பா, மொகஞ்சதாரோ போல தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக நம் கீழடி நாகரிகம் வெளிப்பட்டது. தமிழனின் உயர்வான நகர நாகரிகம் உலகிற்கே தெரியவந்தது. தமிழ் எழுத்துக்களின் காலம் கி.மு என அனைவரும் நினைத்திருந்த நிலையில் கி.மு 600 என எங்கள் கீழடியால் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தான் தொடங்குகிறது என்பது நிரூபணமும் ஆகின்றது.
உலகின் மூத்த நாகரீகமாக பண்ணாட்டு ஆய்வகங்கள் எங்கள் கீழடியின் தொண்மத்தை அங்கீகரித்தன. இத்தனை சிறப்புகள் கொண்ட எங்கள் கீழடியினை உலகமே உற்று நோக்குகிறது. கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும். தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று தழிழகம் வர உள்ள நிலையில், கீழடி தொடர்பான இந்த வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications