திருமண செயலியில் வரன் தேடிய நடிகை.. ஆபாச செயலியில் வீடியோ.. ஐடி ஊழியர் பரபரப்பு புகார்!
சென்னை: திருமண செயலியில் வரன் தேடிய நடிகை, தன்னை ஐடி ஊழியர் ஏமாற்றியதுடன் மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கேக்கிறான் மேய்க்கிறான்... இந்த வார்த்தையை எங்கோ கேட்டமாதிரி இருக்கிறதா? ஆம் பார்த்திபன், வடிவேல் காமெடியில் வடிவேல் துபாயில் வேலை செய்வதாக ஊருக்குள் புருடா விடுவார். ஆனால் இதை பார்த்திபன் புருடா என்பதை கண்டுபிடித்து, வடிவேல் போகும் இடத்திற்கெல்லாம் போய் துபாய் குறித்து கேள்விகளை எழுப்பி வம்பு செய்வார்.

அப்போதுதான் ஒரு முறை நீ துபாய்ல எங்க வேலை செய்தே என வடிவேலுவிடம் பார்த்திபன் கேட்பார். அதற்கு கேக்கிறான் மேய்க்கிறான் கம்பெனி என்பார். அந்த காமெடியில் கேட்ட இந்த வார்த்தையை வைத்து ஒரு படமே எடுக்கப்பட்டுள்ளது.
கேக்கிறான், மேய்க்கிறான் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாயிதா லுப்னா கேத்ரி என்ற லுப்னா அமீர். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் லுப்னா அமீர். இவர் தனது திருமணத்திற்காக Betta Half எனும் மேட்ரிமோனியல் ஆப்பில் சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.
அதே செயலியில் வியாசர்பாடியை சேர்ந்த ஐடி ஊழியர் மசியுல்லா கானும் வரன் தேடி பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் அவர் லுப்னாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர்பிடித்துவிட்டது. இதனால் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தனர்.
இதன் பிறகு இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். இந்த நிலையில் மசியுல்லாகானுக்கு ஏற்கெனவே திருமணமானதை அறிந்த லுப்னா, அவரை விட்டு விலகியுள்ளார். இதனால் மசியுல்லாகான், லுப்னாவிடம் பேசுவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் லுப்னா மசியவில்லை. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லுப்னாவுக்கு மசியுல்லாகான் தொல்லை செய்ததாக தெரிகிறது.

ஆனால் லுப்னா முடியாது என கூறியதால் இருவரும் ஒன்றாக சுற்றிய போது எடுத்த புகைப்படங்களை ஆபாச படங்களுடன் சித்தரித்து வெளியிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மசியுல்லாகான் மீது லுப்னா திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் கைதான மசியுல்லா, சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் தன்னை லுப்னா அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாக மசியுல்லா கொடுத்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீஸார் லுப்னா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக இருவரும் ஒருவரை ஒருவரை மாறி மாறி குற்றம்சாட்டி காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மாநகர் காவல் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லுப்னா அண்மையில் புதிதாக புகார் அளித்துள்ளார். அதில் மசியுல்லா மீது தான் அளித்துள்ள புகாரை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் மனைவியுடன் சேர்ந்து கொண்டு மசியுல்லா கான் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக லுப்னா தெரிவித்துள்ளார். மேலும் பெரவள்ளூர், வேலூர், வாணியம்பாடி காவல் நிலையங்களில் தன் மீது வெவ்வேறு புகார்களை அளித்து மசியுல்லா கான் தொந்தரவு செய்வதாகவும் லுப்னா தெரிவித்திருந்தார்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2020- ஆம் ஆண்டு அவரை பிரிந்த மசியுல்லா கான் திருமணத்திற்கு வரன் தேடி வந்துள்ளார். திருமண செயலி மூலமாக அறிமுகமான லுப்னா, தன்னிடமிருந்து அதிகஅளவு பணம் வாங்கியதாக கூறும் மசியுல்லா, இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆபாச செயலியில் வீடியோ பதிவிட்டு லுப்னா பணம் சம்பாதித்து வருகிறார்.
இதனால் அவருடன் பழகுவதை நான் நிறுத்திவிட்டதாக குற்றச்சாட்டை மசியுல்லாகான் முன் வைத்திருந்தார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை கொண்டு லுப்னா மிரட்டிவதாக மசியுல்லா புகாரில் கூறியுள்ளார். இருவரும் மாறி மாறி புகார் கூறும் நிலையில் எது உண்மை என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications