"விஜய் மீது கொள்ளை பிரியம்".. கேரளா இளம்ஜோடி செய்வதை பாருங்க.. சென்னை நோக்கி 650 கிமீ நடைப்பயணம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வென்று முதல்வராகி உள்ளார் விஜய். இந்நிலையில் தான் விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் கேரளா தம்பதி நடைப்பயணத்தை தொடங்கி உள்ளனர். சென்னையில் முதல்வர் விஜய்யை சந்திக்க கேரளாவில் இருந்து 650 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்து வரும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவாகி உள்ளது. இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதனை விஜய் ரசிகர்கள், தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே தான் கேரளா தம்பதி விஜய்யை பார்க்க நடைப்பயணமாக புறப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஃபி. இவரது மனைவி சஹானா. இவர்கள் 2 பேரும் விஜய்யின் தீவிரமான ரசிகர்கள். விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியது ரொம்ப ஹேப்பியாகினர். தொடர்ந்து சமூக வலைளதங்களில் விஜய்யின் தவெகவை ஆதரித்து பதிவுகள் செய்து வந்தனர்.
குறிப்பாக ரஃபி தனது பல வீடியோக்களில் விஜய் நிச்சயம் தமிழகத்தின் முதல்வர் ஆவார். இல்லாவிட்டால் மொட்டையடிப்பதாக தெரிவித்து இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அவர்கள் ஹேப்பியாகினர். விஜய் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று அவர் மகிழ்ச்சியோடு வீடியோ வெளியிட்டனர்.
அதோடு அடுத்த முதல்வர் விஜய் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இதையடுத்து விஜய்யை எப்படியாவது நேரில் சந்திக்க விரும்பினர். அதோடு கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை பார்க்க முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 7 ம் தேதி மலப்புரத்தில் இருந்து அவர்கள் விஜய்யை பார்க்க புறப்பட்டனர். நடந்தே சென்னை புறப்பட்டு வருகின்றனர்.
4 நாட்களாக அவர்கள் விஜய்யை சந்திக்க நடந்து வருவதை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். சாலையில் நடந்து வருவது, நடக்கும் வழியில் விஜய் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, இரவில் கூடாரம் அமைத்து தங்குவது உள்ளிட்டவற்றை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ டிரெண்டாக தொடங்கி .ள்ளது.
இந்த தம்பதியின் வீடியோவை பார்க்கும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விஜய் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்று பாசிட்டிவ்வாக கமெண்ட் செய்கின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்போம், ''இந்த தலைமுறைக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி செய்கின்றனர்? என்று விமர்சனம் செய்துள்ளனர். மற்றொரு தரப்போ பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யுங்கள் '' என்று அறிவுரை கூறி வருகின்றனர். இந்த தம்பதியின் இந்த செயல் பற்றிய உங்களின் கருத்து என்ன? கமெண்ட்டில் சொல்லிவிட்டு செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications