மணலில் நீட்டியிருந்த கால்.. கடித்து இழுத்த நாய்கள்..பொன்னானி கடற்கரையில் பாதி புதைந்த பெண்.. கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம் பெண் ஒருவரை அவரது கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை கடற்கரை மணலில் புதைக்க முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி வந்தாலும், சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான முகமது. இவருக்கும், பாத்திமா (22) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.

Kerala Malappuram Ponnani Crime News Murder Case Police Investigation Local News Kerala Police Breaking News Ponnani Beach

பாத்திமாவின் நடத்தை

இந்த நிலையில், முகமதுவுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், போதைக்கு அடிமையான அவர், தனது மனைவி பாத்திமாவின் நடத்தையில் தீராத சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று வீட்டில் முகமதுவுக்கும் பாத்திமாவுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முகமது, பாத்திமாவைத் தாக்கியதுடன், தான் வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறிய பாத்திமா கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். பாத்திமா இறந்ததை உணர்ந்த முகமது, கொலையை மறைக்கத் திட்டமிட்டார்.

கடற்கரையில் வீசப்பட்ட உடல்

யாரும் இல்லாத நள்ளிரவு நேரத்தில், பாத்திமாவின் உடலை பொன்னானி துறைமுகம் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைக்குக் கொண்டு சென்றார். அங்கு உடலைப் போட்டுவிட்டு, அதன் மேல் மணலை அள்ளிப் போட்டு மறைக்க முயன்றுள்ளார். பாதி உடல் வெளியே தெரியும் நிலையில், மணலை மட்டும் குவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

மறுநாள் காலை, அந்த வழியாகச் சென்ற மக்கள் கடற்கரை மணலில் ஒரு பெண்ணின் கால் மட்டும் வெளியே தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த தெரு நாய்கள் அந்த பெண்ணின் காலைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது மக்களை மேலும் உறைய வைத்தது. உடனே இதுகுறித்து பொன்னானி காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

முன்னுக்குபின் முரண்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணையில் அது பாத்திமா என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் முகமது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இறுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, முகமதுவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாத்திமாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பொன்னானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே இந்த கொலையில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்த முழு விவரமும் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சந்தேகத்தால் முடிவுக்கு வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+