சென்னைக்கு கணவருடன் வந்த கேரள பெண் ரோகிணி.. இப்படியா ஆகனும்.. திருவனந்தபுரம் ரயிலில் நடந்த கொடூரம்
சென்னை: கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ரோகிணி என்ற பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு குடிமைப் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்த ரோகிணி, ரயிலில் ஜோலார்பேட்டை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் பால்பண்ணை நடத்தி வரும் ராஜேஷ் என்பவரின் மனைவி ரோகிணி. 30 வயதான இவர் அரசு குடிமைப் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். ராஜேஷ் - ரோகிணி தம்பதிக்கு 2½ வயதில் குழந்தை உள்ளது.

காணாமல் போன ரோகிணி
ராஜேஷின் தந்தை சென்னையில் இருப்பதால், அவரை பார்க்க ராஜேஷும் - ரோகிணியும் முடிவு செய்தனர். குழந்தையை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வேஷன் செய்து பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றது. சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டுள்ளது.
டாய்லட்டிற்கு சென்ற ரோகிணி நீண்ட நேரம் ஆகியும் தனது இருக்கைக்கு திரும்பவில்லை. இதனால், பதட்டம் அடைந்த கணவர் ராஜேஷ், டாய்லட் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரோகிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கதறி அழுத கணவர்
அப்போது வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளம் ஒன்றில் பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அங்கு கிடந்த பெண் சடலத்தை கண்டுபிடித்தனர். பெண் அணிந்து இருந்த ஆடைகள் உள்ளிட்டவற்றை வைத்து ரயில் தண்டவாளத்தில் சடலாமக கிடந்தது ரோகிணி என்பதை போலீசார் உறுதி செய்தனர். மனைவி உடலை பார்த்ததும் கணவர் ராஜேஷ் கதறி அழுத காட்சிகள் அங்கு இருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
அதேவேளையில், ரோகிணி தண்டவாளத்தில் எதிர்திசையில் ரயில் வரும் இடத்தில் இறந்து கிடந்தாக சொல்லப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ரயில் இருந்து தவறி விழுந்த ரோகிணி, பலத்த காயத்துடன் எழுந்து உயிரை காப்பாற்ற எதிர்திசைக்கு நடந்தது வந்ததாதாகவும், யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், அவர் உயிருக்கு போராடி இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications