கொரோனா காலத்தில் பள்ளிக் கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்.. ஸ்டாலினுக்கு இளம் சாதனையாளர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா பெருந்தொற்றில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் 7 வயதே ஆன இளம் உலக சாதனையாளர் கெவின் ராகுல் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கெவின் ராகுல். இவர் ஒரு நிமிடத்தில் 150 கார்களின் லோகோக்களை அடையாளம் காணும் நினைவாற்றலை பெற்றுள்ளார். இதனால் இவர் ஆசிய சாதனை புத்தகத்திலும் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இவர் கூறுகையில்
மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின் மாமாவுக்கு,

வணக்கம்

வணக்கம்

எனது பெயர் ஆர் கெவின் ராகுல், நான் 2ஆம் வகுப்பு படிக்கிறேன். நான் ஆசிய அளவிலான சாதனை புத்தகத்தில் என்னுடைய பெயர் இருக்கிறது. அது போல் இந்திய சாதனை புத்தகத்திலும் எனது பெயர் இடம்பெற்றுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறேன். மே 2ஆம் தேதிதான் எனக்கு பிறந்தநாள். அன்றைய தினம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பிறந்தாளாகும். என் பிறந்த நாள் அன்று வெளியான தேர்தல் முடிவுகளில் நீங்கள் வெற்றி பெற்றதன் மூலம் அன்றைய நாள் எனக்கு மேலும் மகிழ்ச்சியான நாளாக மாறியது.

கோரிக்கைகள்

கோரிக்கைகள்

உங்கள் மீது எனக்கு எப்போதும் அன்பு இருக்கிறது ஸ்டாலின் மாமா. நீங்கள் மக்களின் தலைவர், மக்களின் முதல்வர். தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எனக்கு இரு கோரிக்கைகள் உள்ளன. அவற்றை நான் உங்களிடம் வைக்கிறேன்.

தள்ளுபடி

தள்ளுபடி

1. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். அது போல் கொரோனா காலத்தில் பள்ளிக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்.

2. உலக சாதனை புரிந்தமைக்காக நான் உங்களை நேரில் சந்தித்து பாராட்டுகளை பெற விரும்புகிறேன். 7 வயதில் ஒரு நிமிடத்தில் 150 கார்களின் லோகோக்களை அடையாளம் கண்டு சொல்வதில் உலக சாதனை படைத்தேன். உங்களிடம் இருந்து விரைவில் பாராட்டுகளை பெற காத்திருக்கிறேன்.

உழைப்பு

உழைப்பு

கலைஞர் தாத்தா போல உழைப்பும் சுறுசுறுப்பும் ஓய்வறியா தன்மையுடன் உங்கள் நல்லாட்சி தொடர உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்களின் வருங்கால திட்டங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்.

நன்றி

இப்படிக்கு
கெவின் ராகுல் 2ஆம் வகுப்பு

என அந்த சிறுவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+