EPFO 3.0 முதல் கிரெடிட் கார்டு வரை! இன்று முதல் நிகழும் முக்கிய மாற்றங்கள்!
சென்னை: ஊழியர் வருங்கால வைப்பு நிதி முதல் கிரெடிட் கார்டு வரை ஜூன் 1 ஆம் தேதியான இன்று முதல் அமலாக போகும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மாதாமாதம் சிலிண்டர் விலை உள்பட பல்வேறு பொருளாதார விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஜூன் மாதமும் சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு வரை மாற்றங்கள் வந்துவிட்டன.

மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதற்கான கட் ஆஃப் நேரங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. அதன்படி ஆஃப்லைனில் பரிவர்த்தனைகள் செய்ய பகல் 3 மணிக்கும் ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்ய இரவு 7 மணிக்கும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களை தவிர்த்து விட்டு பணப்பரிவர்த்தனை செய்தால் அடுத்த வணிக நாளில் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு
ஜூன் 1 ஆம் தேதியான இன்று முதல் கோடாக் மகிந்திரா கிரெடிட் கார்டில் பெட்ரோல் டீசல், வாடகை பயன்பாட்டு ரசீதுகள், காப்பீடு உள்ளிட்ட பிரிவுகளில் வெகுமதி புள்ளிகளில் வரம்புகளை அறிமுகப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வரம்பை மீறும் செலவுகளுக்கு 1 சதவீத பரிவர்த்தனை கட்டணம் பொருந்தும். வாடகை, கல்வி செலவுகளுக்கு 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அது போல் இன்று முதல் ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.
அது போல் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டில் ரிவார்ட்ஸ் பாயிண்ட்களில் மாற்றங்கள் தொடங்கும்.
இபிஎஃப்ஓ 3.0
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இன்று முதல் இபிஎஃப்ஓ 3.0 ஐ அறிமுகப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஏடிஎம், யூபிஐ மூலம் உடனடியாக பிஎஃப் பணம் எடுப்பதற்கும் இருப்பு தொகை சரி பார்ப்பதற்கும் உதவும்.
படிவம் 16
வேலை கொடுப்பவர்கள், ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்குவதற்கான கடைசி தேதி ஜூன் 15 ஆகும். இந்த சான்றிதழ் பெற்றால்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பதால் இது முக்கியமான படிவமாக பார்க்கப்படுகிறது.
ஆதார்
ஆதார் கார்டுகளில் உள்ள விவரங்களை புதுப்பிக்க ஜூன் 14 கடைசி தேதியாகும். இதை தொடர்ந்து ஆதார் கார்டுகளைப் புதுப்பிக்க ஆன்லைனில் ரூ 25 கட்டணமாகவும் ஆதார் மையங்களில் ரூ 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிகிறது.
சிலிண்டர் விலை
மாதந்தோறும் வணிக பயன்பாடு அல்லது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் நிகழும். அதாவது விலை கூடுவதோ, குறைவதோ, எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதோ ஏற்படும். ஆனால் ஜூன் 1 ஆம் தேதியான இன்று வணிக சிலிண்டர் விலையில் ரூ 25 குறைந்துள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ 1881-க்கு விற்பனையாகிறது.
நிரந்தர வைப்பு நிதி
சூரியோதய் சிறு வங்கி இன்று முதல் ரூ 3 கோடிக்கு குறைவான வைப்புத் தொகைகளுக்கு (Deposit) நிலையான வைப்பு விதிகங்களை 60 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் கூட்டம் ஜூன் 6, 2025 அன்று நடைபெறும். இந்த நேரத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைப்பது குறித்து பேசப்படலாம். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தால், FD மீதான வட்டி விகிதங்கள் குறையக்கூடும்.
சிஎன்ஜி விலையில் மாற்றம்
ஜூன் மாதமான இன்று சிஎன்ஜி விலையிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. மே மாத மத்தியில் சிஎன்ஜி விலை அதிகரிக்கப்பட்டது. கடந்த மாதங்களில் மொத்தம் ரூ 5 அதிகரித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications