"முகம் ஒரு பக்கம் வீங்கி!" பரிதாப நிலையில் கேஜிஎப் பட நடிகை! "ஐயோ.." மோசமான பாதிப்பு! என்னனு பாருங்க
சென்னை: ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் கேஜிஎப் புகழ் மாளவிகா அவினாஷ்.. இவர் இப்போது திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள நிலையில், சில முக்கிய தகவல்களையும் இவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு மாதவன் நடித்த ஜே ஜே படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா அவினாஷ்... இவர் கன்னட சினிமாவில் 1988ஆம் ஆண்டிலேயே அறிமுகமானாலும், தமிழில் 2003இல் ஜேஜே படம் மூலமே அறிமுகமானார்.

இவர் ஜேஜே படத்தில் நாயகியின் சகோதரியாக நடித்திருப்பார். அதன் பின்னர் ஆதி, பைரவா, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் கூட பல படங்களில் நடித்துள்ளார்.
மாளவிகா அவினாஷ்: மேலும், சின்னதிரையிலும் அண்ணி, சிதம்பர ரகசியம், ராஜ ராஜேஸ்வரி, அரசி என்று பல்வேறு சீரியல்களில் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். இப்படி தொடர்ச்சியாகப் பல கேரக்டர் ரோல்களில் நடித்து வருபவர் மாளவிகா அவினாஷ். 2k கிட்ஸுக்கு எளிதாகப் புரிய வேண்டும் என்றால் கேஜிஎஃப் படத்தில் நடித்தவர்.. அதாவது அதில் இரண்டு பாகங்களிலும் கதை கேட்கும் நெறியாளராக நடித்தவர் இவர் தான்.
நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் மாளவிகா அவினாஷ். கடந்த 2013ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், அதன் பின்னர் சினிமாவுக்கு நடுவே தொடர்ச்சியாகக் கட்சி பணிகளையும் செய்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி: இதனிடையே நடிகையும், அரசியல்வாதியுமான மாளவிகா அவினாஷ் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி சிகிச்சை பெறும் படத்தையும் அவரே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவர் மேலும், "உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருந்தால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. இல்லையென்றால் என்னைப் போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள்.. ஒற்றைத் தலைவலியை அலட்சியப்படுத்தாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்,
ஒற்றைத் தலைவலி: இவர் Migrane எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த Migrane என்றால் என்ன.. எதனால் இப்படி ஏற்படுகிறது. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை என்ன என்பதைப் பார்க்கலாம். ஒற்றைத் தலைவலி என்பது இப்போது மக்களிடையே ஏற்படும் மிக மோசமான தலைவலிகளில் ஒன்றாகும். நீரிழப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிகரிக்கும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
ஒற்றைத் தலைவலி அதிகரிக்கும் போது, குமட்டல், தலைச்சுற்றல், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது வழக்கமான தலைவலியைக் காட்டிலும் அதிக வலியை ஏற்படுத்தும். நம்மை பலவீனமாகவும் சோர்வாகவும் உணர வைக்கும். கடுமையான வலி, குமட்டல், வாந்தி, அசௌகரியம் ஆகியவை இதன் அறிகுறியாகும்.
ஒற்றைத் தலைவலி என்பது உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான பாதிப்பாகும். பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications