அப்பா செய்ததெல்லாம் மறந்து போச்சா.. கொஞ்சம் நினைத்து பாருங்க.. வெளுத்த ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா
சென்னை: அப்பாவை ஏமாற்று பேர் வழி பேசுவதை நிறுத்திவிட்டு அவர் செய்த நலத்திட்டங்களை நினைத்து பாருங்கள் என ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் தனது ட்விட்டர் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் செய்த நலத்திட்டங்களை போஸ்டர் போல் அவருடைய ரசிகர் ஒருவர் தயார் செய்துள்ளார். அந்த போஸ்டரை தனது ட்விட்டரில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா பகிர்ந்து கூறியிருப்பதாவது: நேற்று இரவு முதல் எல்லா ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஏமாற்று பேர் வழி போல் பேசி வருகிறார்கள். இதை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்கிறார்கள்.

நேற்று முன் தினம் ரசிகர்களுக்கு இடையூறு நடந்ததற்கு 100 சதவீதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம். ஆனாலும் அப்பா அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அப்பாவை ஏமாற்று பேர் வழி என பேசுவதற்கு முன் அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை யோசித்து பாருங்கள் என கதீஜா கூறி சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் 2016ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சி நடத்தினார். அதில் கிடைத்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தார். அது போல் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வெளிநாடுகளில் இசைக் கச்சேரி நிகழ்த்தி உதவினார்.
2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக திரைத்திறையில் பாதிக்கப்பட்டு ஏழ்மை நிலையில் இருந்த குடும்பங்களுக்கு மளிகை சாமான்களை வாங்கிக் கொடுத்ததுடன் நிறைய உதவிகளை செய்துள்ளார். அது போல் 2022 ஆம் ஆண்டு வறுமையில் லைட்மேன்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உதவுவதற்காக இலவசமாக கச்சேரியை நடத்தி கொடுத்தார்.
எனவே அவரை பற்றி அவதூறாக பேசுவதற்கு முன்பு அவர் என்ன நன்மைகளை செய்தார் என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள் என கதீஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இசைக் கச்சேரி நடந்துமாறு ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர்கள் சமூகவலைதளங்களின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர். இதற்கு ரகுமானோ, சென்னையில் இசைக் கச்சேரிக்கு அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என கூறியிருந்தார். இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்களின் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசிடம் ஏ.ஆர். ரகுமான் தரப்பினர் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இசைக் கச்சேரி நடத்துவதாக ஏ.ஆர். ரகுமான் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய தினம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் இசை நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளில் நடத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி நேற்றுமுன் தினம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மறக்குமா நெஞ்சம் என பெயரிடப்பட்டது. இந்தமுறை மழை வந்தாலும் மழை வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும் என ரகுமான் கூறியிருந்த நிலையில் நேற்றைய தினம் திட்டமிட்டபடி இசை கச்சேரியை நடத்தினார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதை காண 3 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலர் ஆவலோடு வந்தனர். ஆனால் நிகழ்ச்சியை காண நிறைய பேர் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பல ரசிகர்கள் டிக்கெட் இருந்து நிகழ்ச்சியை காணவில்லை.
மூச்சு விட கூட முடியாத நிலையில் பலர் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் திரும்பி சென்றனர். அதாவது 20 ஆயிரம் இருக்கை போட்டுவிட்டு 40 ஆயிரம் டிக்கெட்டுகளை ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்ததாக தெரிகிறது. மேலும் கூட்டத்தை பயன்படுத்தி கவுன்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் பலர் டிக்கெட் இல்லாமலேயே முண்டியடித்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளை பலர் அழைத்து வந்ததால் பெரும் சிரமம் அடைந்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கார் நிறுத்தும் இடம் சரியில்லை, மேலும் ஸ்பீக்கர்களும் சரியாக இல்லாததால் ரகுமான் பாடுவதே கேட்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் டிக்கெட் இருந்தும் ரசிகர்கள் பலர் திரும்பி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமானும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள் என கூறியதுடன் இப்போது நான் பலியாடு ஆகிறேன் என வருத்தமாக தெரிவித்திருந்தார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications