அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்து.. ஆரோக்கிய அரசியலை முன்னெடுத்து குஷ்பு ட்வீட்!
சென்னை: அனைத்து கட்சிகளிலும் உள்ள வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள் என குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1980களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை குஷ்பு பின்னர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து திமுகவில் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்தார்.
பின்னர் சில பிரச்சினைகளால் காங்கிரஸ் கட்சிக்கு இடம்பெயர்ந்தார். இந்த கட்சியில் இருந்து கொண்டு பாஜக மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ்
இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவுக்கு தாவினார். இதையடுத்து சில மாதங்களிலேயே பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தொடர்ந்து அந்த தொகுதியில் களப்பணியாற்றினார்.

குஷ்புவுக்கு தோல்வி முகம்
இந்த நிலையில் இன்றைய தினம் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன. முன்னதாக நேற்று முன் தினம் வெளியான கருத்து கணிப்புகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு தோல்வி முகம் என்றே தெரிவிக்கப்பட்டது.

ட்வீட்
இதைத் தொடர்ந்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்ட ஒரு ட்வீட்டால் அவர் தோல்வியை ஒப்புக் கொண்டார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். அவர் தனது ட்வீட்டில் நாளை மிக முக்கியமான நாளாகும். அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். நாம் அனைவரும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்திருந்தோம் என தெரிவித்திருந்தார்.

குஷ்புவுக்கு பதில்
இதற்கு பலர் குஷ்புவுக்கு பதில் அளித்துள்ளார்கள். அதில் ஒருவர் அக்கா நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்! என தெரிவித்துள்ளார். மற்றொருவர் கள நிலவரத்தை நீங்கள் ஆராய்ந்துள்ளீர்கள் என நம்புகிறேன். இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்து எந்த கட்சிக்கு தாவுவது என்பது குறித்து நன்றாக கணக்கு போட்டிருப்பீர்கள் என்கிறார்கள்.

வலைஞர்
இன்னும் சிலரோ தான் ஜெயிக்க மாட்டோம் என நாசுக்காக உண்மை சொல்லி விட்டீர்கள் நன்றி என தெரிவித்துள்ளார்கள்.மேலும் பிஜேபி தமிழகத்தில் வெற்றி பெறும் என்று உங்கள் ஆழ்மனதில் யாரோ சென்று நம்ப வச்சிருக்காங்க என்கிறார் இந்த வலைஞர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி











Click it and Unblock the Notifications