"சி.வி.சண்முகம் வளர்ப்பு அப்படி!" நயன்தாரா விவகாரத்தில் கூட்டணி கட்சின்னாலும் கண்டித்த குஷ்பு
சென்னை: நடிகை நயன்தாரா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அருவருக்கத்தக்க கருத்துக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது போல் பெண்ணை அவதூறாக பேசுபவர்களின் வளர்ப்பு முறையை காட்டுகிறது என்றும் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெண்கள், குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், சிலரின் தனிப்பட்ட சொத்தோ அல்லது கேலிப் பொருளோ அல்ல. எந்த ஒரு பெண்ணின் பெயரையும் மலிவான நகைச்சுவைகளுக்கோ, இழிவான தாக்குதல்களுக்கோ, அல்லது தங்கள் கருத்துகளை நியாயப்படுத்தவோ பயன்படுத்தக் கூடாது.

ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்தி பிறரைக் கேலி செய்வது அல்லது தங்கள் கருத்தை மெய்ப்பிப்பது, பேசுபவரின் மனநிலையையும், வளர்ப்பு முறையையும் மட்டுமே வெளிப்படுத்தும். போதும், இது போதும்.
உலகில் ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவரே. ஒரு நடிகை குறித்து சாதாரணமாகக் கருத்து தெரிவிக்கும் முன், அதேபோல் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் குறித்து பேசுவீர்களா என சிந்தியுங்கள். அவர்கள் பொதுவெளியில் இருந்தாலும், பொதுச்சொத்து அல்ல.
எத்துறைப் பெண்ணாக இருந்தாலும், நீங்கள் அளிக்கும் மரியாதைக்கு அவர்கள் தகுதியானவர்கள். கண்ணியம் ஒருவரின் தொழிலைப் பொறுத்தது அல்ல. இத்தகைய இழிவான கருத்துகள் பேசுபவர்களைத்தான் சங்கடப்படுத்தும்; அந்தப் பெண்களை அல்ல.
அவை அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், தவறான வளர்ப்பையும், அடிப்படை மனிதநேயமற்ற தன்மையையும் அம்பலப்படுத்துகின்றன. இது வெறும் மரியாதையின்மை மட்டுமல்ல, மனிதகுலத்திற்கே அவமானம். மரியாதை என்பது ஒரு வழி பாதை அல்ல, மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் குஷ்பு எந்தவித தயக்கமும் இல்லாமல் சி.வி.சண்முகத்திற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். எனினும் திரிஷா குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய போது குஷ்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி கட்சியினருடன் கலந்து கொண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், அப்துல் கலாம் கனவுக் காண சொன்னார். முதல்வர் ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலேச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன் என சொல்கிறார்.
ஆமாம், எனக்கு நயன்தாரா வேண்டும், என் கனவை நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வையுங்கள் என யாராவது கேட்பார்கள், அதை நிறைவேற்றுவாரா என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவரது பேச்சு தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் எந்தவிதமான தவறான நோக்கத்துடனும் இப்படி கூறவில்லை. இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இவருக்கு எதிராக மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications