கந்தர்வக்கோட்டையே ஆடிப்போச்சு.. சேரி பேச்சுக்கு குஷ்பு கொடுத்த புது விளக்கம்.. வேளச்சேரி இருக்கேவாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்று ஊர் பெயரிலேயே இருக்கிறதே நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாஜக நிர்வாகியும் தேசிய மகளிரணி நிர்வாகியுமான குஷ்பு கூறியுள்ளார்.

நடிகையாக இருந்த போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி மீடியா வெளிச்சத்திலேயே இருக்கிறார் நடிகை குஷ்பு. தற்போது பாஜகவில் இருந்தாலும் தேசிய மகளிர் ஆணைய நிர்வாகியாகவும் இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் குஷ்பு அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

Khushbu press meet Chennai explain about cheri language

கற்பு பற்றி கருத்து கூறியதில் இருந்து சமீபத்திய சேரி பாஷை வரை கருத்து கூறி பலரது எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார்.
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த சில கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. மன்சூர் அலிகானை பலரும் கடுமையாக வசைபாட குஷ்புவும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

குஷ்புவிற்கு எதிராக அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பவே, மன்சூர் அலிகான் திரிஷா பிரச்சினை என்பது மறைந்து குஷ்புவிற்கு எதிராக பலரும் கச்சை கட்டினர். குஷ்புவின் கருத்து சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை ஏற்படுத்தியது. அதாவது மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது மகளிர் ஆணையம் என்ன செய்துக்கொண்டிருந்தது? என்று திமுக ஆதரவாளர்கள் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் குஷ்புக்கு சற்று காட்டமாக கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட குஷ்பு, “இதைதான் திமுக குண்டர்கள் செய்கிறார்கள். இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. பெண்களை அவமதிக்க தவறான மொழியை கையாள்கிறார்கள். என்னால் உங்களின் 'சேரி' மொழியில் பேச முடியாது. ஆனால் இந்த விவகாரம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.

“திமுக உங்களுக்கு சட்டத்தை பற்றி கற்பிக்கவில்லை எனில் நீங்கள் வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது. உங்களை போன்ற முட்டாள் திமுக தலைவர் ஸ்டாலினை சுற்றி இருப்பது அவமானம். ஸ்டாலின் அவர்களே உங்களை சுற்றி இருக்கும் முட்டாள் கூட்டமே உங்களை அழித்துவிடும்” என்றும் விமர்சித்துள்ளார்.

இதில் அவர் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பேசும் மொழியை 'சேரி மொழி' என இழிவுபடுத்தியுள்ளார் என்றும், அதன் மூலம் அம்மக்களையும் இழிவுபடுத்தியுள்ளார் எனவும் குஷ்பு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் குஷ்புவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

கடந்த சில நாட்களாகவே மீடியாவில் அதிகமாக செய்திகளில் பேசப்பட்டு வரும் குஷ்பு இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஷ்புவிடம் அவரது எக்ஸ் வலைத்தள பதிவு பற்றி செய்தியாளர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த குஷ்பு, சேரி என்ற வார்த்தை அரசு புத்தகத்திலேயே உள்ளது என்று கூறினார். வேளச்சேரி, செம்மஞ்சேரி என்று உள்ளது. அதை யாரும் மாற்றச்சொல்லி கேட்கவில்லையே என்றும் கூறினார். நான் யாரையும் மரியாதை குறைவாக பேசமாட்டேன். நான் பேசியதில் எந்த தவறும் இல்லை அதற்கு வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்றும் கூறினார் குஷ்பு.

சேரி என்றால் அன்பானவர் என்று முன்பு விளக்கம் சொன்ன குஷ்பு தற்போது வேளச்சேரி, செம்மஞ்சேரி என்று இருப்பதாக கூறியுள்ளார். மணிப்பூர் சம்பவம் பற்றி ஊடகங்களுக்கு எப்போது தெரியவந்ததோ அப்போதுதான் தனக்கும் தெரியவந்தது என்றும் எல்லோரும் எப்போது பொங்கினார்களோ அப்போதுதான் தானும் பொங்கியதாக கருத்து கூறியதாகவும் குஷ்பு ஆவேசமாக பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+