கொரோனா தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. குஷ்பு சுந்தர் விளக்கம்
சென்னை: கொரோனா தடுப்பூசியையும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று அதிகாலை மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் மக்களும் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இன்று மாரடைப்பு
நேற்று காலை தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை சமூகவலைதளங்களில் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்கள். இதுகுறித்து நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நேற்றைய தினம் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும் தயவு செய்து தொடர்புப்படுத்தி பேசாதீர்கள்.

ஊசி போடுங்கள்
இரண்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மருத்துவர்கள் அவர்களது கடமையை செய்யட்டும். நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுள்ளவர் எனில் தயவு செய்து மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொள்ளுங்கள்.

ட்வீட்டிற்கு பதில்
நீங்களாக ஒன்றை நினைத்துக் கொண்டும் வதந்திகளாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டாம் என குஷ்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது போல் குஷ்புவின் ட்வீட்டிற்கு ஏராளமானோர் பதிலளித்துள்ளார்கள். சிலர் இது எங்கள் இஷ்டம். தடுப்பூசி போட எங்களை கட்டாயப்படுத்தாதீர் என கூறியுள்ளனர்.

குழாய்
இன்னும் சிலர் இதய தமனியிலோ அல்லது அங்குள்ள ரத்த குழாய்களிலோ கொழுப்புகள் படிந்து ரத்தம் இதயத்திற்கு செல்லாத வகையில் கொழுப்புகள் அடைத்துக் கொண்டிருந்தால் அப்போதுதான் மாரடைப்பு ஏற்படும். எனவே மாரடைப்பிற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications