விட மாட்டேன்.. சைதை சாதிக் பேசியதை கை தட்டி ரசித்த அமைச்சர் மன்னிப்பு கேட்கணும்.. குஷ்பு கொந்தளிப்பு
சென்னை: சென்னையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பெண்களை அவதூறாக பேசியதை கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் பேசுகையில், பாஜகவில் அங்கம் வகிக்கும் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார்.
அவர்களுடைய கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பெண்மையை அவமானப்படுத்தும் வகையிலும் அவர் சொன்ன கருத்து அடங்கிய வீடியோ பொது வெளியில் வைரலானது.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜை வைத்துக் கொண்டே சைதை சாதிக் ஆபாசமான , தரங்கெட்ட கருத்துகளை தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கு மேலாக சைதை சாதிக்கின் தரக்குறைவான வார்த்தைகளை அமைச்சர் மனோ கண்டிக்கவில்லை என்பதுதான் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த சம்பவத்திற்கு கனிமொழி வருத்தம் கேட்டுள்ளார்.

நடிகை குஷ்பு
இந்த நிலையில் நடிகை குஷ்புவுக்கு போன் செய்த சைதை சாதிக் அவரிடம் மன்னிப்பும் கேட்டார் என திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்து குஷ்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், சைதை சாதிக் விஷயத்தில் திமுக தலைமை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதற்காக காத்திருந்தேன்.

சைதை சாதிக் மீது நடவடிக்கை
ஆனால் சைதை சாதிக் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. சரி சைதை சாதிக்கின் தரம் அப்படிதான் என்றாலும் அவரது பேச்சை கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவே இல்லை. தரக்குறைவான பேச்சுக்காக சாதிக்கைவிட அமைச்சர் மனோவே குற்றம் இழைத்தவர். எனவே அமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரை நானோ பாஜகவோ இந்த பிரச்சினையை எளிதில் விடாது.

நியாயம் வேண்டும்
சாதிக் என்னிடம் போனில் பேசி மன்னிப்பு கேட்டதாக திமுகவினர்தான் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. கனிமொவி வருத்தம் தெரிவித்துவிட்டார். ஆனால் அது போதாது. சைதை சாதிக் குறித்து டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்திற்கு வரும் 4ஆம் தேதி நேரில் சென்று புகார் அளிக்கவுள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக












Click it and Unblock the Notifications