ஓ திராவிட முட்டாள்களே! கருணாநிதியை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள்.. திமுகவினரை விளாசும் குஷ்பு
சென்னை: விமர்சித்தவர் வீட்டு பெண்களை தரக்குறைவாக குஷ்பு பேசிய நிலையில் திராவிட முட்டாள்களே! என்னை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள். என் மீது வெறுப்பை கக்குகிறீர்கள் என குஷ்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது குஷ்புவின் தாயை தவறாக பேசும் வகையில் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்.

இதனால் கொந்தளித்த குஷ்பு, நேற்று செய்தியாளர்களை சந்தித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். அவர் பேசுகையில் பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்த போது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்கள் ஒரு பெண்ணை இழிவாக பேசும் போது அவர்களை அந்த பெண்ணை ஒரு மகளாகவோ மருமகளாகவோ தாயாகவோ பார்ப்பதில்லை. நான் எனக்காக பேசவில்லை, என் மகள்களுக்காகவும் மற்ற பெண்களுக்காகவும் பேசுகிறேன். பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக் கூடாது. இது போன்ற ஆட்களைத்தான் திமுகவில் தீனி போட்டு வளர்க்கிறார்கள்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய மொழியிலேயே என்னால் பேச முடியும். ஆனால் நான் அப்படி செய்தால் என் வளர்ப்பு தவறாகிவிடும். என்னை சீண்டி பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என கோபமாக கொந்தளித்த குஷ்பு ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டார்.
குஷ்பு மீது அவதூறு பேசிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி குஷ்பு ட்விட்டரில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அவர் கூறுகையில் நான் 28 ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்த முகம் இதுதான். இவர்தான் என் இதயத்தை இன்னமும் படபடக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என போட்டியிருந்தார்.
இந்த ட்வீட்டை பார்த்த நபர் ஒருவர் இந்த மனிதரின் (உங்கள் கணவரின்) பணத்தை பாதுகாக்கவே நீங்கள் பாஜகவில் குதித்தீர்கள் என பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு அடி செருப்பால என பதிவிட்டு நீங்கள் வேண்டுமானால் உங்கள் தொழிலை பாதுகாக்க உங்கள் வீட்டின் பெண்களை பயன்படுத்துபவராக இருக்கலாம். வெட்கம் கெட்டவர்கள் என பதிவிட்டிருந்தார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து கொண்டு ட்விட்டரில் ஒருவரது வீட்டு பெண்கள் பற்றி குஷ்பு தகாத முறையில் பேசியதை சுட்டிக்காட்டி அவரது செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்த லட்சணத்தில் நீங்கள் செருப்பால் அடிப்பதை பற்றி பேசுகிறீர்கள் என விமர்சித்திருந்தனர். உங்களை யாராவது கடுமையாக விமர்சித்தால் நீங்கள் அவர்களின் வீட்டு பெண்களை வரம்பு மீறி விமர்சிக்கிறீர்கள். இதெல்லாம் கோழைத்தனம் என இன்னொரு வலைஞர் தெரிவித்திருந்தார். மேலும் குஷ்புவை பலர் நடிகை என தரக்குறைவாக விமர்சித்ததாக தெரிகிறது.
இவ்வாறு குஷ்புவை விமர்சித்து பலர் கருத்து போட்டு வருகிறார்கள். அதிலும் அவர்கள் திமுகவினர் என சொல்லப்படுகிறது. இதனால் குஷ்பு மீண்டும் கொந்தளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஓ திராவிட முட்டாள்களே! திமுகவை கட்டமைக்க தனது வாழ்நாளையே செலவிட்ட சிறந்த தலைவர் டாக்டர் கருணாநிதியை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள்.
நீங்கள் பழிவாங்கும் எண்ணத்துடனும் வெறுப்புடனும் இருக்கிறீர்கள் என எனக்கு தெரியும். நான் திமுகவில் இருந்த போதும் நான் நடிகையாகத்தான் இருந்தேன். தற்போது என்னை நடிகை என நீங்கள் கிண்டல் செய்வது என் காதில் கேட்கவில்லை. உங்களை விட வலிமையான தோள்களை நாங்கள் கொண்டிருக்கிறேன். உங்கள் பக்கத்தில் என் பெயரை போட்டால்தான் நீங்கள் செய்தியில் இடம் பெறுவீர்கள். ஆனால் எங்கள் முதல்வர், அதாவது உங்கள் தலைவரும் நடிகர் என்பதை மறந்துவிடாதீர்கள். என்ன பரிதாபம்!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!












Click it and Unblock the Notifications