ஆசையை நிறைவேற்றாவிட்டால் ஆவியாக வந்து உன்னை தொல்லை செய்வேன்.. மாமியார் மிரட்டல்.. குஷ்பு "பகீர்"
சென்னை: தன்னுடைய மாமியாரின் ஆசையை நடிகை குஷ்பு நிறைவேற்றியிருக்கும் சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அது போல் தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்டோருடனும் மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டியுடனும் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் வருஷம் 16 எனும் படத்தில் 1989 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்தார்.
தற்போது திரையில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். அது போல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் நடுவராகவும் சில நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். அது போல் பல ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் அத்தை மகளாக நடித்திருந்தார்.
இவர் அரசியலிலும் இணைந்து கலக்கி வருகிறார். பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். அத்துடன் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். நடிகை குஷ்பு சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரிந்த விஷயம்தான். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
குஷ்பு தனது மாமியாரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதாவது அண்மையில் குஷ்பு ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய மாமியார் கிரிக்கெட் வீரர் தோனியின் மிகப் பெரிய ரசிகை. அவருக்கு 88 வயதாகிறது. அவருடைய வாழ்நாள் முடிவதற்குள் தோனியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
அவர் தோனியை பார்க்காமல் இறந்துவிட்டால் ஆவியாக வந்து என்னை தொந்தரவு செய்வதாக என்னிடம் கூறியிருந்தார். இதற்காக 3 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்தேன். அது தற்போதுதான் நடந்தது. என்னுடைய மாமியாரை நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தோனியை சந்திக்க வைத்தேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என கூறியுள்ள குஷ்பு தோனியுடன் தனது மாமியார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
குஷ்பு தனது மாமியார் மீது மிகவும் அக்கறை கொண்டவர். மாமியாருடன் அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பார்த்தால் அவர் குஷ்புவின் தாயா என சந்தேகிக்கும் அளவுக்கு இருவரும் பாசத்துடன் இருப்பார்கள். அது போல் சுந்தர் சியின் சகோதரிகள் மீதும் குஷ்பு பாசமாக இருப்பார். இதை அவரே நிறைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
-
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
காலரில் என்னங்க இது.. அமைச்சரானதும் வன்னியரசும் இப்படி இறங்கிட்டாரே.. விசிகவிற்கு இது புதுசு -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications