தீயாய் பரவும் கொரோனா.. வீட்டு தனிமையில் குஷ்பு! வேலூர் எம்எல்ஏவுக்கும் தொற்று உறுதி
சென்னை: நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அவர் டிவிட்டர் வாயிலாக உறுதிப்படுத்தினார். அது போல் வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில் கொரோனா இரு அலைகளில் தப்பிய நான் இறுதியாக 3ஆவது அலையில் சிக்கிவிட்டேன். எனக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது.
ஆனால் தொடர்ந்து மூக்கில் சளி இருந்து கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு முறை சோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

கொரோனா அறிகுறிகள்
தனிமையில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. எனவே என்னை ட்விட்டரில் தொடர்ந்து பொழுதை போக்க உதவுங்கள் என முக்கிய கோரிக்கையை வைத்துள்ள குஷ்பு, "உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் போய் கொரோனா சோதனை மேற்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து விரைவில் குணமடைய வாழ்த்துகள் என ட்விட்டரில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

குஷ்பு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவுக்கு ஏற்கெனவே நடிகர்கள் சத்யராஜ், மோகன்பாபு, நடிகைகள் திரிஷா, ஈஷா குப்தா, அட்ரிஜா ஆடி ராய், மீனா, லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது கொரோனாவுக்கு குஷ்புவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் சி கொரோனா
கடந்த 2-ஆவது அலையின் போது குஷ்புவின் கணவர் சுந்தர் சி-க்கு கொரோனா தொற்று பாதித்தது. அப்போது குஷ்பு, அவரது இரு மகள்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சுந்தர் சி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமையில் இருக்கும் சுந்தர் சியை குஷ்பு வாசற்படியில் உட்கார்ந்து பார்த்து சென்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்து அது வைரலானது.
Recommended Video

மேலும் ஒரு எம்எல்ஏ
அது போல் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா உறுதியாகிவிட்டது. கொரோனா 2ஆவது அலையின் போது பாதிக்கப்பட்ட இவர் தற்போது மூன்றாவது அலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனுக்கும் அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications