அந்த ரூ2க்கு ட்வீட் போட்டவங்க சொன்னதுதான் உண்மை? காங். கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் சொன்ன குஷ்பு!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இப்போதும் இருக்கிறீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, இப்போதைக்கு கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை என மழுப்பலான பதிலை கூறியிருக்கிறார் நடிகை குஷ்பு. இதனால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் திங்கள்கிழமை இணைவது உறுதி என்றே கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு பங்கேற்றார். இதனையடுத்து அவர் பாஜகவில் சேருவார் என கூறப்பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இது கருதப்பட்டது. பாஜகவில் சேர அந்த கட்சியின் தலைவர்கள் விடுத்த அழைப்புகளுக்கும் இது பதிலாக பார்க்கப்பட்டது.
பின்னர் பாஜகவில் நீங்கள் சேரப் போவதாக செய்திகள் வெளிவருகிறதே என்ற கேள்விக்கு, ஒரு ட்வீட்டுக்கு ரூ2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப் போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என மிகவும் காட்டமாக பதிலளித்திருந்தார் குஷ்பு. இதனால் பாஜகவுக்கான கதவுகளை குஷ்பு மூடிவிட்டார் என உறுதியாக நம்பப்பட்டது.

பாஜகவில் இணைகிறார்
ஆனால் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நட்டா முன்னிலையில் குஷ்பு திங்களன்று அக்கட்சியில் இணையப் போகிறார். இதற்காக டெல்லி செல்கிறார் என செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் கணவருடன் டெல்லிக்கு விமானம் மூலம் குஷ்பு சென்றார். அப்போது குஷ்புவிடம் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.

எதுக்கும் பதில் இல்லை
முதலில் பாஜகவில் நீங்கள் இணையப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்தார். குஷ்பு. அதற்காகத்தான் டெல்லி போகிறீர்களா? என்ற அடுத்த கேள்விக்கும் நோ கமெண்ட்ஸ் என்று மட்டும் பதில் தந்தார் குஷ்பு. ஆனால் காங்கிரஸ் தொடர்பான கேள்விக்கு குஷ்பு சொன்ன பதில்தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங். குறித்து மழுப்பல் பதில்
காங்கிரஸ் கட்சியில் நீங்கள் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதைப்பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை என பதில் தந்தார். காங்கிரஸ் கட்சியில் நீடிக்கிறார்களா என்ற கேள்விக்கும் மழுப்பலான பதிலாக, எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் சொனனர் குஷ்பு. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாக முடிவு செய்துவிட்ட காரணத்தால்தான் குஷ்பு இப்படி மழுப்பலான கூறியிருப்பதாகவே தெரிகிறது.

ரூ2 ட்வீட்டை உண்மையாக்கும் குஷ்பு
இதனால் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் குஷ்பு இணைவது உறுதியாகி இருக்கிறது. ஒரு ட்வீட்டுக்கு ரூ2 வாங்கிக் கொண்டு பாஜகவில் இணையப் போவதாக வதந்தி கிளப்புகிறார்கள் என போனவாரம்தான் குஷ்பு சொல்லியிருந்தார்.. இப்போது அந்த ரூ2 ட்வீட் வதந்திகளை உண்மையாக்கப் போகிறார் குஷ்பு என்றே தெரிகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications