சூப்பர் பேரப்பிள்ளைகளும்.. சுப்ரீம் தாத்தாவும்.. பார்க்கவே செம ஹேப்பியா இருக்கே!
சென்னை: குழந்தைகளுடன் விளையாடுவது என்பது பெரிய கலை.. அவர்களுடன் பேசுவதே முதலில் மிகப் பெரிய கலைதான். அதில் கை தேர்ந்தவர்கள் தாத்தா பாட்டிகள்.
Recommended Video
காரணம், அப்பா அம்மாக்களை விட தாத்தா பாட்டிகளுக்குத்தான் மிகவும் பொறுமை உண்டு, நேரம் உண்டு, குழந்தைகளுக்கேற்ற நைச்சியமும் அவர்களிடம் மட்டுமே இருக்கும். அந்த வகையில் தனது குழந்தையிடம் தனது தந்தை விளையாடும் விதம் குறித்து சிலாகித்து நமக்கு எழுதி அனுப்பியுள்ளார் நமது வாசகர் இராஜசேகர் இராஜேந்திரன். அவரது கடிதம் இதோ:

வணக்கம், எனது பெயர் இராஜசேகர் இராஜேந்திரன். இங்கு kids are cool பகுதியில் எங்கள் வீட்டு குழந்தையை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.
நான் குழந்தை என்றது 60வயதை கடந்த என்னுடைய அப்பாவை தான். பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் என் தந்தை, 144 தடை உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்கிறார். அம்மாவிற்கு உதவியாக எல்லா வீட்டு வேலைகளையும் செய்வார் (சமையல் உட்பட)
வீட்டில் 2 குழந்தை (அக்கா மகன் 3 வயது, எனது மகன் 2 மாதம்). அக்காவின் மகன் மிகவும் சுட்டி நாள்முழுவதும் ஏதாவது செய்து கொண்டோ அல்லது விளையாடிக்கொண்டே இருப்பான். ஆக இப்போது அவனையும் வீட்டிற்குள்ளையே வைத்து பூட்டியாகிவிட்டது.

என் அக்கா மகன் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாட அடம் பிடித்து அழ ஆரம்பிக்க, பேரனை மகிழ்ச்சி படுத்த தாத்தாவே (என் தந்தை) பேரனின் நண்பராகி போனார். ஆம் குழந்தையோடு சேர்ந்து அவரும் குழந்தையாகினார். உடைந்த பிலாஸ்டிக் கூடையை தலைக்கவசம் என்று தலையில் வைக்க அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று சிரிக்கும் அந்த மகிழ்ச்சியை பாருங்கள்.
பேரன் சோர்ந்து இருக்கும் பொழுது நடனமாடி உற்சாகப்படுத்துகிறார். அதுவும் இட்லி அவித்துக்கொண்டே. இன்று தாத்தா தான் தன் உலகம் என்று இருக்கிறான் பேரனும் என்று கூறியுள்ளார் இராஜேந்திரன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications