#KidsAreCool குவியும் குட்டீஸ்களின் சூப்பர் டூப்பர் கலாட்டாக்கள்.. நீங்களும் அனுப்புங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவைரஸ் பரவலால் அமலாகியுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் எப்படி இருக்கிறார்களோ.. ஆனால் குட்டீஸ்கள் நிச்சயம் ஹேப்பியாகத்தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு எப்பவுமே பயம் இருக்காது. பெரியவர்கள் பயப்படும் அளவுக்கு சிறார்கள் பயப்படுவது இல்லை. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் குழந்தைகளுக்கு வீட்டோடு அடைந்து கிடப்பது கஷ்டமான காரியம்தான்.. அதை விட அவர்களை வெளியே போகாமல் தடுப்பதிலும் பெரியவர்களுக்கு நிறையவே கஷ்டம்தான்.

அதையும் தாண்டி சிறார்கள் எப்படியெல்லாம் இந்த லாக் டவுனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு என்ஜாய் செய்கிறார்கள் என்பதுதான் இந்த புகைப்படத் தொகுப்புத் தொடரின் பின்னணி. நமது வாசகர்கள் அனுப்பிக் குவித்து வரும் புகைப்படங்களிலிருந்து அடுத்த தொகுப்பு இதோ.

சூப்பர் ஒர்க் பிரம் ஹோம்

சூப்பர் ஒர்க் பிரம் ஹோம்

இது நமது வாசகர் இ. பெல்ஹின் வாசகம் நமக்கு அனுப்பி வைத்துள்ள சூப்பர் படம். அவரது மகன்தான் இதில் இருக்கிறார். குட்டிப் பையனைப் பாருங்க.. கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொண்டு தட்டிக் கொண்டிருக்கிறார்..சட்டை கூட போடாம என்னா சமர்த்தா வேலை பார்க்கிறார் பாருங்க.. "ஒர்க் பிரம் ஹோமாம்".. ராஜா.. நீயுமாய்யா எங்களை கலாய்க்கிறேன்னு பல பேர் புன்னகையுடன் முனுமுனுக்கும் மைன்ட் வாய்ஸ் கேட்கிறதா குட்டிப் பையா!

அடுத்து மித்ரா பாப்பா

அடுத்து மித்ரா பாப்பா

இது நம்ம மித்ரா பாப்பா. நமது வாசகர் அருள் பாண்டி ராமசாமியின் செல்ல மகள். இவரும் ஒர்க் பிரம் ஹோம்தான்!.. வீடு பெருக்குகிறார். தோட்டத்தை சுத்தம் செய்கிறார்.. அப்படியே லேப்டாப்பிலும் மூழ்கிப் போய் விடுகிறார்.. சூப்பர்.. கொஞ்ச நேரம் கூட சும்மா இருப்பதில்லை போலும்.. முற்றிலும் எங்கேஜ்டாக இருக்கிறார் மித்ரா பாப்பா.. பாராட்டலாமே!

கெளதம் - கெளரவ்

கெளதம் - கெளரவ்

இது ஒரு இரட்டையர்களின் குட்டிக் கதை.. கதையின் நாயகர்கள் ஏ.எஸ். கெளதம் மற்றும் ஏ.எஸ். கெளரவ். சொந்த ஊர் ஓசூர். வீட்டில் இவர்கள் சேட்டை செய்வதை விட இதுபோல விளையாடி பொழுதைக் கழித்து வீட்டையே குதூகலமாக்கி விடுகின்றனராம். பில்டிங் பிளாக்ஸ், கலரிடுவது, பாக்ஸிங் செய்வது என்று கலக்குகிறார்கள்.. பெருமையுடன் போட்டோக்களை அனுப்பி வைத்து பூரிக்கிறார் தாயார் சக்தி பிரியா.

பரத்குமார் மகள்

பரத்குமார் மகள்

இது நம்ம வாசகர் பரத்குமாரின் மகள்.. வீட்டுக்குள்ளேயேதான் இருக்கோம் அங்கிள்.. வெளிலெல்லாம் போகலை.. நல்லா பாத்துக்கங்க என்று சொல்வது போல ஒரு போட்டோவை அனுப்பி வைத்துள்ளார் போல.. முகத்தில் இருக்கும் பூரிப்பைப் பார்த்தால் லாக்டவுனை செம ஜாலியாக என்ஜாய் செய்வது போலத் தெரிகிறது. எல்லாம் ஓகே.. யாரையும் தொந்தரவு செய்யாமல் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தால் சரித்தான்.

முடியலங்காரத்தில் குதித்த வேலு பிரகாஷ் மகள்

முடியலங்காரத்தில் குதித்த வேலு பிரகாஷ் மகள்

இது நமது வாசகர் வேலு பிரகாஷின் புகைப்படம். படத்தில் தலையில் கிளிப்புகளுடன் காணப்படுகிறாரே அவர்தான் வேலுப் பிரகாஷ்.. இப்படி அவர் தலையில் விளையாடி அசத்தியிருப்பது அவரது மகள்.. தலைமுடியலங்காரமாம்.. அந்த குட்டிப் பாப்பா முகத்தில் சிரிப்பைப் பாருங்க.. அப்பாவுக்கு தலை பின்னி கிளிப் போட்டு விட்டாங்களாமாம்.. அவ்வளவு பூரிப்பு.. என்ஜாய் பாப்பா!

ஷாஸா ஜரீன்

ஷாஸா ஜரீன்

இது 5 வயது குட்டிப் பாப்பா ஷாஸா ஜரீனின் புகைப்படம். அவரது அப்பா முகம்மது சப்வான் அனுப்பிவைத்துள்ளார். மேடம் லாக் டவுனை செம ஜாலியாக என்ஜாய் செய்து வர்றாங்க போல.. செல்பி எடுப்பது, ஜாலியாக பாட்டு கேட்பது, பொம்மை குதிரை சவாரி என படு பிசியாக இருக்கிறார் ஜரீன் பாப்பா.. பரவாயில்லை.. யாரையும் டிஸ்டர்ப் பண்ணாமல் இதுபோல ஹேப்பியாக பொழுதைக் கழிப்பது நல்ல விஷயம்தான்.. என்ஜாய் ஜரீன்!

நித்தியா ராஜாவின் மகள்

நித்தியா ராஜாவின் மகள்

இது நமது வாசகர் நித்தியா ராஜாவின் மகள்.. நான் வீட்டிலேயே இருக்கேன்.. நீங்களும் பத்திரமா வீட்டுக்குள்ளேயே இருங்க என்று அழகான ஒரு செய்தியை கொடுக்கிறார் இந்த குட்டிப் பாப்பா. உண்மைதான்.. நம்மாளும் யாருக்கும் பரவக் கூடாது.. யாரிடமிருந்தும் நமக்கு பரவி விடக் கூடாது இந்த வைரஸ். அதனால்தான் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்கிறார்கள்.. தவறாமல் கடைப்பிடிப்போம்.

சூப்பர் ரிதன்யா

சூப்பர் ரிதன்யா

இது நம்மளோட இன்னொரு வாசகர் நித்யா முருகவேல். நாமக்கல்லிலிருந்து தனது மகள் ரிதன்யாவின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். உருப்படியான முறையில் சூப்பராக தனது விடுமுறைக் காலத்தை கழித்து வருகிறார் ரிதன்யா. ஓவியம் வரைவது, கிராப்ட் செய்வது, கலர் செய்வது திரெட்டிங் என சூப்பராக பொழுதைக் கழிக்கிறார். கூடவே வீட்டிலும் சமர்த்தாக இருக்கிறார். சூப்பர்டா ரிதன்யா. படங்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு.. வாழ்த்துகள்.. !

மரத்தில் ஊஞ்சலாடி

மரத்தில் ஊஞ்சலாடி

இது நமது இன்னொரு வாசகர் கோகிலா அனுப்பியுள்ள படம். அவரது வீட்டில் குழ்நதைகள் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் காட்சி இது. இதெல்லாம் இப்போ உள்ள பிள்ளைங்களுக்கு மறந்து போன ஒன்று. இதற்கெல்லாம் முன்பு நேரம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் இப்போது கிடைத்துள்ள நல்ல இடைவெளியில் இதை அனுபவிக்கும் வாய்ப்பு குட்டீஸ்களுக்குக் கிடைத்துள்ளது. அதேசமயம்.. சமூக விலகலும் முக்கியம்.. வீட்டை விட்டு வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே விளையாடுங்கப்பா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+