கலைஞர்னு பெயர் இருக்குதாம்.. அதான் இல்லாத பிரச்சினையை கிளப்புறாங்க.. கிளாம்பாக்கம் பற்றி சேகர்பாபு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயரை வைத்ததற்கு தான் இப்படி அவதூறு பரப்புகிறார்கள் என்றும், கிளாம்பாக்கத்தில் ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டம் நேற்று தொடங்கியது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், நேற்று 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆளுநர் ரவி உரை நிகழ்த்தியது மேலும் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்ற ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் ஆர் என் ரவி தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே சட்டசபையை விட்டு வெளியேறினார். இது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை எற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் மாளிகையும் சபாநாயகர் அப்பாவுக்கு விளக்கம் அளித்துள்ளது.
செல்லூர் ராஜூ கேள்வி: இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடந்தது. சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை பேச அனுமதித்தார். அப்போது பேசிய செல்லூர் ராஜூ, புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஒரு கேள்வியை கேட்கிறேன். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துவிட்டீர்கள்..
இதற்காக எதையும் விட்டு எறிய கூடாது. அங்கே மக்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அங்கே இருந்து சென்னைக்கு வருவதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் இருந்து அதிக மக்கள் இங்கு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இதில் கருணை உள்ளத்தோடு அதிக பஸ்கள் இயங்குகின்ற வரைக்காவது தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை முன்பு இருந்த கோயம்பேட்டுக்கே வந்து இறக்கிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
சிவசங்கர் விளக்கம்: இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். அப்போது அவரும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். அப்போது இது கேளம்பாக்கம் இல்லை.. கிளாம்பாக்கம். இதில் தெளிவு வேண்டும். இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திட்டத்தை நீங்கள் தான் ஆரம்பித்தீர்கள். அதனை நாங்கள் பாதியில் விட்டு செல்லாமல், அதனை முழுமைப்படுத்தி நிறைய வசதிகளோடு பார்த்து பார்த்து கட்டப்பட்டுள்ளது.
முன்பு பாரீஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் மாற்றப்படும்போதும் இதே போல தான் சில பிரச்சினைகள் வந்தது. அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை என செய்திகளில் போட்டார்கள். இது உங்கள் ஆட்சியில் தான். புதிதாக ஒரு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும் போது இப்படித்தான் சில தயக்கம் இருக்கும். இப்போதும் அப்படித்தான்.
அமைச்சர் சேகர்பாபு விளக்கம்: ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் பயணித்து வருகின்றனர். பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் இது குறித்து பிரச்சினை எழுப்பவில்லை. பேருந்தில் பயணிக்காத அண்ணனை போல ஒரு சிலர் தான் இப்படி பேசுகின்றனர். என்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
குடிநீர், கழிப்பறை, சுமைகளை தூக்குவதற்கு ட்ராலி, பேட்டரி கார்கள், நடைமேம்பாலம் மற்றும் மின் தூக்கிகள் என எத்தனையோ வசதிகள் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கின்றது. இத்தனை வசதிகள் இருந்தாலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைத்ததால் தான் இந்த மாதிரி அவதூறுகளை பரப்பு கின்றனர். தூங்குபவர்களை எழுப்ப முடியும் ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications