கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா? ரயில்வே அதிகாரிகள் குட்நியூஸ்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த சில நாட்களாகவே சர்ச்சை மிகுந்ததாக மாறி இருந்தது. பக்ரீத் பண்டிகை, சுபமுகூர்த்த நாட்கள் என அடுத்தடுத்து இருந்த காரணத்தால் ஏராளமான மக்கள் கடந்த வார இறுதியில் சென்னையை விட்டு வெளியேறினார்கள். அப்படி வெளியேறிய மக்களுக்கு போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை.. பலரும் நள்ளிரவில் அவதிப்படும் நிலை 3 நாட்கள் வரை நீடித்தது. இந்நிலையில் கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக ரயில் நிலையத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பக்கத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போதே ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையத்தை அமைக்காமலும், ஜிஎஸ்டி சாலையை கடக்க நடை மேம்பாலத்தை கட்டாமலும், வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் மேம்பாலத்தை அமைக்காமலும் திறக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து 30 கிலோ மீட்டர் தள்ளி பேருந்துநிலையம் அமைப்பதால், பேருந்து நிலையத்திற்கு மக்கள் இரவில் வருவதற்கு நள்ளிரவாகிவிடும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
பல்வேறு குறைகள் திறக்கப்பட்டபோது சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அவற்றை அரசு சரி செய்தது. அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையமும் நடைமேம்பாலமும் அமைக்க அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கின. தற்போதைய நிலையில் நடைமேம்பால பணிகள் ஆமைவேகத்தில் தான் உள்ளன, அதேநேரம் ரயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் தான் தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதை அமைந்துள்ளதால், எளிதாக ரயில்களில மக்கள் ஏறி ஊருக்கு போய்விட முடியும். அதேபோல் தேவைப்பட்டால் விரைவு ரயில்களையும் நிறுத்தி அப்படியே எளிதாக மக்கள் ஊருக்கு போக முடியும். எழும்பூருக்கோ, தாம்பரத்திற்கோ போக வேண்டியது இல்லை என்கிற அளவிற்கு முக்கியமான ரயில் நிலையமான கிளாம்பாக்கம் உருவாக போகிறது.
ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியினை தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் டெண்டர் விட்டது. இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் இருக்கிறது. ஜிஎஸ்டி சாலையை கடந்து சென்றால், எளிதாக ரயில் நிலையத்திற்குள் போக முடியும்.
அதற்காகவே அங்கு ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. தற்போதைய நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய நடைமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. முதலாவது நடைமேடையில் மேல் கூரை அமைக்கப்பட்டு விட்டது. அங்கு தரைத்தளம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இதுதவிர, உயர்நிலை மின்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டது. விரைவில் டிக்கெட் புக்கிங் அலுவலகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இதுதவிர, மற்றொரு நடைமேடைக்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. அடுத்த மாதத்துக்குள் ரயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என நம்பலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications