கிளாம்பாக்கத்தில் யாருங்க அது? மீண்டும் கிளம்பிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கிலி.. கசிந்ததா ரகசியம்?
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் குறித்து யாராவது அவதூறு பரப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருக்கும் நிலையில், இப்படி ஒரு தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை திறப்பதற்கு முன்பேயே அதாவது கடந்த டிசம்பர் மாதமே ஒரு தகவல் வெளியாகியிருந்தது.. இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை, இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் புனேவை சேர்ந்த PVG பி.வி.ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

பராமரிப்பு பணிகள்: இந்த நிறுவனம்தான், குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன், சுப்ரீம்கோர்ட், சென்னை ஏர்போர்ட் போன்றவற்றின் பராமரிப்பு பணிகளின் இணை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.. அதுமட்டுமல்ல சென்னையின் மெட்ரோ ரயில் நிலையங்களின் பராமரிப்பு பணிகளையும் இந்த நிறுவனம்தான் மேற்கொண்ட வருகிறது.
அந்தவகையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை இயக்கும் பணி மற்றும் பராமரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொள்ளப்போவதாக கூறப்பட்டது.. குறிப்பாக, கிளாம்பாக்கத்தில் முன்னணி காபி கடைகள், உணவு சங்கிலிகள் மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் உணவகங்கள், ஆவின் பார்லர்கள், இயந்திரமயமாக்கப்பட்ட பராமரிப்பு, சுத்தமான மற்றும் நேர்த்தியான உட்புறங்கள், மரியாதையான ஊழியர்கள் மற்றும் பல விற்பனை நிலையங்கள் இருக்கும் என்றார்கள்.
விளம்பரங்கள்: இந்த பஸ் ஸ்டாண்டில் உள்ள 108 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி, கிளாம்பாக்கம் பஸ் டெர்மினஸ் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மொத்தத்தில், கிளாம்பாக்கம் பஸ் டெர்மினஸ், ஏர்போர்ட்டுக்கு இணையாக பராமரிக்கப்படும் என்று பிவிஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்து, இதற்காக டெண்டரும் கோரப்பட்ட நிறுவனங்களின் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது.
நிறுவனம்: மொத்தம் 15 வருடங்களுக்கு, இந்த பஸ் ஸ்டாண்டை பராமரிக்கும் பொறுப்பை இந்த நிறுவனம் ஏற்க உள்ள நிலையில், இதற்காக இந்த நிறுவனம், ரூ.30 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் விவகாரம் தொடர்பான ரகசிய தகவல்களை, சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள சிஎம்டிஏ., அலுவலகத்தில் இருந்து, பிவிஜி இந்தியா நிறுவனத்திற்கு, அதிகாரிகள், மெயில்கள் மூலமாகவும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், மெயில் மூலமாக அனுப்பப்பட்ட இந்த தகவல்கள் மற்றும் டெண்டர் தொடர்பான ஆவணங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு, வெளியில் கசிய விடப்பட்டுள்ளதாம்.
யார் திருடியது: இது தொடர்பாக, சென்னை கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் சிஎம்டிஏ தரப்பில் புகார் அளித்திருக்கிறார்கள்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. டெண்டர் தொடர்பான ரகசியங்களை கசியவிட்ட மர்ம நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணையும் துவங்கி உள்ளனர்.
இ-மெயில் மூலம் அனுப்பப்பட்ட தகவல்கள், ஆவணங்களை திருடியது யார்? வெளியில் கசியவிட்டது யார்? என்று தெரியவில்லை.. ஏற்கனவே கிளாம்பாக்கம் விவகாரம் வெடித்து வரும்நிலையில், இப்படி ஒரு திருட்டு சம்பவம் வெளியாகி மேலும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
அரசு வார்னிங்: அதுமட்டுமல்ல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் குறித்து யாராவது அவதூறு பரப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருக்கும் நிலையில், இப்படி ஒரு தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications