"இழுழுபறி"கிளாம்பாக்கம்.. அசுர வேகத்தில் 10 பணிகள்.. திடீர்னு எகிறிய செலவு.. என்னாது தீபாவளிக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில், அதுகுறித்த அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சில தகவல்களும் வெளியாகி உள்ளது.

வண்டலூர் அருகே சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது.

Kilambakkam Bus Stand and Do you know why Kilambakkam bus terminus opening is delayed

கட்டுமான பணிகள்: ஆனால், இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது..

மேலும், பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் ஆரம்பமாயின. இந்த பணிகள் எல்லாமே இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

சேகர்பாபு நேரடி ஆய்வு: கடந்தவாரம்கூட, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.. கிளாம்பாக்கத்துக்கும் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதேபோல, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் கிளாம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, திறப்பு விழாவுக்கு பேருந்து நிலையம் தயாராகி வரும்நிலையில் இந்த பேருந்து முனையத்தின் நிலைமை, சூழல் குறித்தெல்லாம் அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்..

கிட்டத்தட்ட 99 சதவீதத்திற்கு மேல் பணிகள் இங்கு நிறைவடைந்த நிலையில், மிச்சம் 1 சதவீதம் பணிகளே முடிக்கவேண்டியிருப்பதாகவும் சொன்னார்கள்.

அதனால்தான், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எப்போது திறக்கப்படும்? செப்டம்பர் 15ம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு தலைமை செயலாளர் பதிலளிக்க மறுத்து விட்டார். அப்படியானால், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழாவானது, மேலும் தள்ளிப்போகும் என்றே கணிக்கப்பட்டது.

படிப்படியாக பஸ் அனுமதி: இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கிளாம்பாக்கத்தில், கட்டுமான பணிகள் முடிந்து ஒரு பகுதியை மட்டும் முதலில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

முதல் கட்டமாக நெல்லை எக்ஸ்பிரஸ் பஸ்களும், அடுத்த கட்டமாக மதுரைக்கும் பஸ்களை இயக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இப்படி படிப்படியாக பஸ் ஸ்டாண்டு முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

தீபாவளி: எனினும், பேருந்து நிலையத்தின் முழுமையான திறப்பு தள்ளி போகவே வாய்ப்புள்ளதாம்.. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, பேருந்து நிலையத்தை சுற்றிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.. ஆனால், இன்னும் முடிவடையவில்லை.. இந்த பணிகள் பாக்கி உள்ளதால், பஸ் ஸ்டாண்டு திறப்பு தள்ளிப்போகும்... மொத்தம், 10 பணிகள் நிலுவையில் இப்போதைக்கு இருக்கிறது. அதனால், தீபாவளி வரை பஸ் நிலைய பணி நீடிக்கும்.

இருந்தாலும், பஸ் நிலையத்தை படிப்படியாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது.. நிலுவையில் உள்ள 10 பணிகளில் சிலவற்றுக்கு மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது.. அதில் சில பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன..

கூடுதல் செலவு: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து முதல்கட்டமாக திருநெல்வேலிக்கும், அடுத்து மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரத்துக்கும் பஸ்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இதுகுறித்து உறுதியான தகவல்கள் இனிமேல் அறிவிக்கப்படும்.. புதிய பணிகள் திட்டத்தால் 25 சதவீதம் செலவு அதிகரித்திருக்கிறது" என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+