Chennai Bus App என்றால் என்ன? கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகளுக்கு எப்படி பயன்படும்?
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயனாளிகளும் இதை பயன்படுத்தலாம்.
மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் செயலி மூலம் செல்போனில் அறிந்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பேருந்து செயலி மூலம் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
இந்த செயலி மூலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் , குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ப நாம் பயணத்தை மேற்கொள்ளலாம். அதே போல் பேருந்து தடம் குறித்த Search Route Option என்பதை கிளிக் செய்தால் போதும் , குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விவரங்களையும் அறிந்துக் கொள்ளலாம்.
தேவையான வழித்தடத்தை கிளிக் செய்யும் ஆப்ஷனும் உள்ளது. பேருந்துகளின் லைவ் லொகேஷனை உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதியும் உள்ளது. பயணம் குறித்து கருத்துகளை பதிவு செய்யலாம். இந்த செயலி தனியாக பயணிக்கும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் இருக்கும்.
இந்த செயலி மூலம் முன் பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் முன் பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் அறியலாம். இந்த சென்னை பேருந்து செயலி மூலம் கிளாம்பாக்க பேருந்து நிலைய விவரங்களையும் அறியலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறக்கப்படும் நிலையில் அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
CMDA உதவி எண்- பொது- 78457409245/ 7845764345
ஒருங்கிணைந்த கட்டணமில்லா உதவி எண் (MTC/SETC/TNSTC)- 149
MDA உதவி எண்- சிற்றுடை போக்குவரத்து - 7845700557/7845727920












Click it and Unblock the Notifications