கிளாம்பாக்கத்தில் குட்நியூஸ்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் சட்டென கூடிய கூட்டம்.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: கிளாம்பாக்கத்தில் ஸ்பெஷல் கிளாஸ் ஒன்று நடந்துள்ளது.. இதுகுறித்து தமிழக அரசு அறிக்கையே வெளியிட்டுள்ளது.. என்ன அது?
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதுமான இணைப்பு வசதிகள் இல்லை என்றும், மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

வசதிகள்: இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் ஊரப்பாக்கம் இடையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில்வே ஸ்டேஷன் நிலையம் அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளும் ஜரூராக தொடங்கப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளத்திற்கு மேல்மட்ட நடைபாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை எப்படி சுத்தமாக வைத்து கொள்வது என்பது குறித்து, டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
விழிப்புணர்வு: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தலின்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையக் கூட்டரங்கில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் இணைந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாட்டு என்னும் தலைப்பில் பேருந்து முனையத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கான மூன்று நாள் விழிப்புணர்வு பயிற்சி நேற்று முதல் தொடங்கியது.
இதை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். வாழ்வியல் பயிற்சி கருத்தாளர் பாஸ்கர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மகிழ்ச்சிகரமாக பயிற்சியில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை கூறினர். பேருந்து முனைய சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், தங்கும் இடத்தை சுத்தமாகவும் பயன்படுத்துவதாக உறுதி அளித்தனர்.
முக்கியத்துவம்: பின்னர் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும குழு, பேருந்து முனையத்தில் உள்ள வசதிகளை அறிந்துகொள்ள பேருந்து முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு எங்கெங்கே என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை நேரில் காண்பித்து, முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறப்பட்டது.
அனைவருக்கும் காவேரி மருத்துவமனை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பயிற்சியை 3 நாட்கள் நடத்துவதற்கும் ஒவ்வொரு நாட்களும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் காலையிலும், மாலையிலும் இரு குழுக்களாக பயிற்சி கொடுக்கப்பட்டது.
நடத்துனர்கள்: நேற்று காலையில் நடந்த பயிற்சியில் 26 நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களும், மாலையில் நடந்த பயிற்சியில் 28 நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாடு, பேருந்து முனைய சிறப்பு அம்சங்கள் பற்றிய கையேடும் பயிற்சியும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இத்தகைய பயிற்சிகள் அளிக்கவேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் கூறினர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications