கிளாம்பாக்கத்தில் பெரிய பிரச்சனை தீர்ந்தது.. இனி எளிதாக பயணிக்கலாம்.. அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க அரசு சார்பில் ப்ரீபெய்ட் ஆட்டோசேவை துவங்கப்பட்டு உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

 Kilaampakkam bus stand comes with prepaid auto for the ease of passengers

சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் .

சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்டோ செலவு; இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க அரசு சார்பில் ப்ரீபெய்ட் ஆட்டோசேவை துவங்கப்பட்டு உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பயணம்: ஒரு லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த பேருந்து நிலையத்தில்.. பண்டிகை இல்லாத காலத்தில் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 (80%) அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 (20%) அரசுப் பேருந்துகள் என ஆக மொத்தம் 870 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் (30.01.2024) மாதவரம் பேருந்து முனையத்தில், தென் மாவட்டங்களுக்கான பேருந்து இயக்கத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-18, சேலம்-17. விருத்தாசலம்-6, கள்ளக்குறிச்சி-16, விழுப்புரம்-16. கும்பகோணம்-14, சிதம்பரம்-5. நெய்வேலி-11. கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-5, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-10. திருவண்ணாமலை (வழி) செஞ்சி-22, போளூர் & வந்தவாசி-20 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அமைச்சர் ஆய்வு; சமீபத்தில் கூட போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தினை ஆய்வு மேற்கொண்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை கேட்டறிந்தார்கள். இவ்வாய்வின் போது, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெ.பார்த்தீபன் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கடந்த மாதம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து செங்கல்பட்டு. திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-118. சேலம்-66. விருத்தாசலம்-30. கள்ளக்குறிச்சி-50, விழுப்புரம்-59. கும்பகோணம்-52, சிதம்பரம்-21. நெய்வேலி -46, கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-32, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-35, திருவண்ணாமலை (வழி) செஞ்சி-125, போளூர்-30, வந்தவாசி-46 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சாதனை; இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஒரு லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த பேருந்து நிலையத்தில்.. பண்டிகை இல்லாத காலத்தில் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று ஒரு பக்கம் மக்கள் சிலர் புகார் அளித்து வருகின்றனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கே பேருந்துகள் வராமல் போக.. மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை புகார் எழுந்ததை தொடர்ந்து போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்தனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை 1 லட்சம் பயணிகளை ஊருக்கு அனுப்பி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சாதனை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+