கிளாம்பாக்கத்தில் மகிழ்ச்சி.. இனி நிம்மதி.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் "380" நிக்குது பாருங்க.. அட
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் போக்குவரத்து துறை மீண்டும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. என்ன அது?
தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும்.
சிறப்பு பஸ்கள்: அதுபோலவே, சிறப்பு பேருந்துகளையும் விடுமுறை நாட்களில் இயக்கி வருகிறது.. பொதுவாக, தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.
கோடை விடுமுறை: தற்போது கோடை விடுமுறை ஆரம்பமாகி உள்ளது.. விடுமுறை தினங்களும் அடுத்தடுத்து வரஉள்ளன.. இதைத்தவிர, சுப முகூர்த்த நாட்கள், வார இறுதி நாட்களும் நெருங்கி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், இதையெல்லாம் கருத்தில்கொண்டு, 380-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இயக்க தற்போது திட்டமிட்டுள்ளது.
தமிழக பள்ளி, கல்லூரி, அலுவலர்களுக்கு வருகின்ற மார்ச் 23ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதாலும், மார்ச் 24ம் தேதி சுபமுகூர்த்தம், பௌர்ணமி மட்டுமல்லாது ஹோலி பண்டிகை என்பதாலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வார விடுமுறை: இந்த விடுமுறை நாட்களை கொண்டாட பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கும் கோயில்கள் அல்லது தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் தயாராகி வருகிறார்கள். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக போக்குவரத்து கழகமானது இன்று அதாவது மார்ச் 22 முதல் மார்ச் 24ம் தேதி வரை கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 305 பேருந்துகளும், மார்ச் 23ம் தேதியில் இருந்து 390 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. மேலும் தமிழக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிக்கப்பட்டு ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக சாலை வழி போக்குவரத்து அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.
மக்கள் மகிழ்ச்சி: எனவே இக்கோடை விடுமுறை காலம் முழுவதும் தினசரி 800 பேருந்துகளையும், 364 ஏ.சி. பேருந்துகளையும், 67 ஸ்பேர் பேருந்துகளையும், வார விடுமுறை நாட்களில் 1000 பேருந்துகளையும் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழக போக்குவரத்து துறை மேற்கொள்ளும் இந்த அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications