Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் சர்ச்சை: ஓ! மக்கள் பொங்கி எழ இதுதான் காரணமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையமே இரவு 2 மணிக்குக் கலவர பூமியாகக் காட்சி அளித்தது. பேருந்து கிடைக்காமல் மக்கள் பொங்கி எழுந்துவிட்டனர்.

Kelambakkam Bus Station Video Viral: Minister explains

இந்தப் பிரச்சினை தொடர்பாகச் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அரசு அவசரகதியில் பேருந்து நிலையத்தைத் திறந்துவிட்டது. முறையான சின்ன சின்ன அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், சின்ன சின்ன பிரச்சினை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். சின்ன சின்ன பிரச்சினைகள் இல்லை. பெரும் பெரும் பிரச்சினைகள் எல்லாம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்துதான் பேருந்து நிலையத்தைத் திறந்துள்ளோம் என்றார்.

ஆனாலும் இந்தப் பிரச்சினை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆகவே அது குறித்து சில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், "பல ஆண்டுகளுக்கு முன்னால் பாரிமுனையிலிருந்து பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது இப்படித்தான் சில சர்ச்சைகள் ஏற்பட்டன.

Kelambakkam Bus Station Video Viral: Minister explains

அன்றைய பத்திரிகைகளை நீங்கள் இன்று புரட்டிப் பார்த்தாலே அந்தச் செய்திகளை நீங்கள் படிக்க முடியும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியில்லை.

ஓட்டுநர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. உணவக வசதிகள் இல்லை என்று பல செய்திகள் எழுதப்பட்டன.

ஆனால், பின்னாளில் கோயம்பேடு பேருந்து நிலையம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டது என்பது மக்கள் அனைவருமே அறிவார்கள். அதைப்போன்ற குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்க்கட்சிகளால் முன்வைக்க முடியவில்லை.

நேற்று சட்டசபையில் பேசும் போதுகூட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கிளாம்பாக்கம் என்பதற்குப் பதிலாக கேளம்பாக்கம் என்கிறார். இப்படித்தான் பலர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வராமலே ஏதேதோ சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள்.

அங்கே வந்து பேருந்து பிடித்து ஊர்களுக்குப் பயணம் செய்பவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அங்கே நிலைமை சரியாகத்தான் இருக்கிறது. எந்தக் குறைபாடுகளும் இல்லை. அன்றைக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பற்றி எழுதியதைப் போல இன்று வசதிகள் குறைந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் இல்லை.

Kelambakkam Bus Station Video Viral: Minister explains

இன்றைக்குச் சர்வதேச விமானநிலையத்தில் இருக்கக் கூடிய வசதிகளுக்கு இணையான வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. அது தான் உண்மை.

கடைகள் நிறைய உள்ளன. அந்தக் கடைகளை ஒப்பந்தப்புள்ளி விடுவதற்கான வேலைகளைச் செய்து வருகிறோம். விரைவில் அங்கே கடைகளும் திறக்கப்பட்டு விடும்.

அடுத்ததாக அங்கே ஏடிஎம் வசதி இல்லை என்று மக்கள் சொல்கிறார்கள். அங்கே 24 மணிநேரமும் இயங்கக் கூடிய ஏடிஎம் வாகனங்களை நிறுத்தி உள்ளோம். அங்கே ஏடிஎம் மையங்களைத் திறப்பதற்கான வேலைகளை வங்கிகள் செய்து வருகின்றன. இவை எல்லாம் இடைக்கால பிரச்சினைகள்தான்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட இந்தப் பிரச்சினையை அவையில் எழுப்பினார். 2 நாள்கள் பிரச்சினை நடந்ததாகச் சொன்னார். அது 2 நாள் அல்ல. ஒரு இரவு நடந்தது.

அது ஏன் நடந்தது என்றால், அன்று சனிக்கிழமை. அடுத்த நாள் முகூர்த்த நாள். ஆகவே, பயணிகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதைப் போன்ற பிரச்சினை கோயம்பேட்டிலும் ஏற்பட்டுள்ளது.

Kelambakkam Bus Station Video Viral: Minister explains

நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த ஒரு ஆண்டுகாலமாகத் தீவிரமாக இந்த விழாக்காலங்களை முன்கூட்டியே கண்காணித்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தித் தருகிறோம்.

அப்படி அதிகப்படுத்தியதால்தான் கிளாம்பாக்கத்தில் இருந்து மக்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், பொங்கல் பண்டிகைக்கு ஊர் போய்ச் சேர்ந்தார்கள். அன்று செய்த எங்களால், ஏன் அந்தக் குறிப்பிட்ட சனிக்கிழமை செய்ய முடியவில்லை என்று கேட்கலாம்.

அன்று 133 +70 என்று நாங்கள் பேருந்து எண்ணிக்கையைத் திட்டமிட்டிருந்தோம். அவை போதவில்லை. ஆகவே, விழுப்புரம் பணிமனையிலிருந்து பேருந்துகளை அழைத்திருந்தோம். அன்று மதுராந்தகத்தில் ஒரு விபத்து.

ஆகவே வண்டிகள் வருவதில் தாமதம். அதற்கு மக்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். உடனடியாக 80 மாநகரப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு, நிலைமை சீரானது. ஆக, ஒரு நாள் ஏற்பட்ட பிரச்சினை.

அதை வைத்து பேருந்து நிலையமே சரி இல்லை என்று அண்ணாமலை போன்றவர்களால் ஒரு பொய் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அதுவே உண்மை" என்கிறார் அமைச்சர்.

அப்படி என்றால், ஏன் இதுவரை கோயம்பேட்டிலிருந்து இயக்கும் போது இந்தப் பிரச்சினை வரவில்லை என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

"பொதுவாகவே கொரோனாவுக்குப் பிறகு விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து வெளியூருக்குப் போகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதைக் குறித்த தரவை நாங்கள் எடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு முன்பதிவு செய்து சென்னையிலிருந்து வெளியூருக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம். அதே இந்த ஆண்டு 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் முன்பதிவு மூலம் மட்டுமே பயணம் செய்துள்ளார்கள். ஆக, நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் பேருந்து தட்டுப்பாட்டுக்குக் காரணம்.

Kelambakkam Bus Station Video Viral: Minister explains

மேலும் விழுப்புரம், திருச்சி ஊர்களுக்குச் செல்லத்தான் அன்று தட்டுப்பாடு ஏற்பட்டது. முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இந்த இரண்டு ஊர்களுக்கும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் இப்போது இந்த ஊர்களுக்கான 80% பேருந்துகள்தான் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. மீது 20% மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கி வருகிறோம். ஏனெனில் அந்தப் பகுதி மக்கள் கிளாம்பாக்கம் வர வேண்டும் என்றால் தூரம் அதிகம். ஆகவே அதைச் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலை விரைவில் சீராகும்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+