கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு போக முடியாதா? தமிழக அரசு வார்னிங்.. ஆம்னியின் "கறார்".. குழம்பும் பயணிகள்
சென்னை: வருகிற 24ம் தேதிக்கு பிறகு, சென்னைக்குள் வர தடை விதிப்புக்கு ஆம்னி பஸ் உரிமயாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. இதுகுறித்த தங்கள் நடைமுறை சிக்கல்களையும் விவரித்துள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்பி வருகின்றன. வரும் 24 ஆம் தேதிக்குக் பிறகு ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.

பயணிகள்: அதாவது, பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தரும் வரை, கோயம்பேட்டில் இருந்தே பஸ்கள் புறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், 24ம் தேதிக்கு பிறகு பயணியருடன் சென்னை நகருக்குள் வர ஆம்னி பஸ்களுக்கு அனுமதியில்லை. ... கிளாம்பாக்கம் புதிய நிலையத்தில் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன...
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் நிலையத்தில் தான் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. இதுதான், ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கோயம்பேடு: எனவே, அனைத்து வசதிகளும் வரும் வரை கோயம்பேடில் இருந்துதான், ஆம்னி பஸ்கள் புறப்பட்டு கிளாம்பாக்கம் சென்று பயணியரை ஏற்றிச் செல்வதாக அறிவித்து விட்டனர்.
ஆனால், வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.. அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தபடி, ஆம்னி பஸ்களை, நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கஎடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
மீண்டும் வார்னிங்: இதுதொடர்பாக நேற்று இரவும் போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில் "கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது.
ஆனால், நாளை கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்றும், கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை, முக்கியமாக, 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்றும், வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார் என்றும் மீண்டும் அதிரடி காட்டியிருக்கிறது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்.
குழப்பம்: இரு தரப்பிலுமே இப்படி கறார் மற்றும் பிடிவாதம் காட்டிவருவதால், இதனால், நாளை ரிசர்வ் செய்யப்பட்டு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications