கிளாம்பாக்கத்துக்கு "அப்ளாஸ்".. அட, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் எப்போ வருது தெரியுமா? சென்னை குஷி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்த வழக்கு, சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வரும்நிலையில், கிளாம்பாக்கத்தில் அமைய போகும் ரயில்வே நிலையம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதுமான இணைப்பு வசதிகள் இல்லை என்றும், மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்தன. எனவே, கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷ்ன் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வண்டலூர் ஊரப்பாக்கம் இடையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில்வே ஸ்டேஷன் நிலையம் அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளும் ஜரூராக தொடங்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளத்திற்கு மேல்மட்ட நடைபாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
மெட்ரோ வசதிகள்: இதுகுறித்து சிஎம்டிஏ நேற்றைய தினம் சொல்லும்போது, "மெட்ரோ ரயில் திட்டம் 3ம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் வரப்போகிறது.. கேசிபிடி மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி இந்த மாதத்துக்குள் முடிவடையும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து, புது ரயில்வே ஸ்டேஷன் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.. இந்த ஸ்டேஷனில், 3 பிளாட்பார்ம்கள் அமைக்கப்பட்டு, புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே ஸ்டேஷன்: அதுமட்டுமல்ல, இந்த ரயில்வே ஸ்டேஷன் எப்படி அமைய போகிறது என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பே தகவல்களும் வட்டமடித்தன.. மொத்தம் 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துவார்கள் என்பதற்காக, எஸ்கிலேட்டர்கள், லிப்ட் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்ட பொது மேலாளர் ஆர்என் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னபோது, "கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே புதிதாக அமைய உள்ள ரயில் நிலையம் பணிகள், அடுத்த 6 மாதங்களில் முடிவடைந்துவிடும்.. அதுமட்டுமின்றி வில்லிவாக்கம் பகுதியிலும் புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது.. வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது" என்றார்.
பாராட்டு: நேற்றைய தினம், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடந்தது.. அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது என்றுகூறி தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications