கிளாம்பாக்கத்தில் மறுபடியுமா? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு நோக்கமே வீணாயிடுமே? கோர்ட்டுக்கு அரசு முடிவு?
சென்னை: 'கோயம்பேட்டில் பயணிகளை ஏற்ற ஆம்னி பஸ்கள் உரிமை கோரிய வழக்கில், அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதுமான இணைப்பு வசதிகள் இல்லை என்றும், மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் தேவை என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

வசதிகள்: இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷ்ன் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் ஊரப்பாக்கம் இடையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில்வே ஸ்டேஷன் நிலையம் அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளும் ஜரூராக தொடங்கப்பட்டுள்ளன.
எனினும், கோயம்பேட்டில் பயணிகளை ஏற்ற ஆம்னி பஸ்கள் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.. அதாவது, கடந்த 2003ம் ஆண்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு துவங்கிய போதும், இதுபோலவே ஒரு பிரச்சனை வந்துள்ளது.. இது போன்ற கட்டுப்பாடுகள் அப்போதும் விதிக்கப்பட்டிருக்கின்றன.. அதை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
கட்டுப்பாடுகள்: அந்த வழக்கில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.. அதை சுப்ரீம்கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.. அந்த வழக்க தற்போது நினைவுகூர்ந்து, இந்த மனுவை ஆம்னி தரப்பில் தாக்கல் செய்துள்ளனர்..
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு நிலையம் வரை மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக பயணிகள் மட்டுமல்லாமல், தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளதால், தொடர்ந்து கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்கள்.
விசாரணை: இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது.. அப்போது தமிழக அரசு தரப்பில், ''ஆம்னி பஸ்கள் கோயம்பேடு பஸ் முனையத்திலிருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விட மட்டும் அனுமதி வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் செல்லும் முன்பே பேருந்து நிரம்பி விடும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகி விடுமே? என்றார்.
வரைபடம்: மேலும், எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களும் அடையாளம் கண்டு வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறி உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார் நீதிபதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications